தெரசா மேக்கு விடைகொடுக்கும் நேரம் !
போரிஸ் ஜான்சன் அடுத்த இங்கிலாந்து பிரதமராகிறார். இப்போதே அவரை இங்கிலாந்தின் அடுத்த டிரம்ப் என்று ஒரு கூட்டமும், மற்றொரு கூட்டம் அவர்தான் அடுத்த சர்ச்சில் என்றும் பேசிக்கொண்டிருக்கிறது.
தெரசா மேக்கு இது பிரிவு உபசார நேரம். இன்னும் சிறிது நேரத்தில் டௌனிங் தெருவில் தன் கணவர் பிலிப்புடன் விருந்தில் பங்கேற்று தன்னுடன் பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கு விடை சொல்லுவார். இது தெரசா மேவின் இறுதி சொற்பொழிவுக்கு முன்னாடி நடைபெறும். இவர் பக்கிங்காம் பேலஸ் சென்று ராணி முன்னே தன் பதவியை விட்டு விலகியதைக் கூறுவார்.
மந்திரிசபையை ஜான்சன் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. அடுத்து பிரெக்ஸிட் திட்டத்தை அனைவரும் ஏற்கச் செய்யும் பெரும் பொறுப்பு இவரின் தோள் மீது ஏறுகிறது. தெரசா மே, ராணியின் முன் பதவி விலகுவதோடு போரிஸ் ஜான்சன் பதவியேற்பதையும் பார்க்கும் அவலம் வேறு உள்ளது. இது பழங்கால நெறிமுறைப்படி நடைபெறும் சடங்கு.
தெரசா மே பதவி விலகினாலும் அவர் மூன்றாண்டுகளாக பிரதமராக பதவி வகித்திருக்கிறார். பிரிட்டனின் வரலாற்றில் இரண்டாவது பெண்மணி இவர்.
நன்றி: சிஎன்என்