விட்டமின் சி சத்து உடலுக்கு அவசியமா?
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
விட்டமின் சி உள்ள பொருட்களை சாப்பிடுவது அவசியமா?
நிச்சயமாக. ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை என கண்ட இடங்களில் நண்பர்களின் காசிலாவது வாங்கி குடியுங்கள். இல்லையெனில் ஸ்கர்வி பிரச்னை ஏற்படும். விட்டமின் சி சத்தை உடல் தானாக உருவாக்கிக்கொள்ளும் தன்மை முன்னர் இருந்தது என்றும் பின்னர் அந்த திறனை காலப்போக்கில் உடல் இழந்து விட்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நாம் 61 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த திறனோடு இருந்தோம் என்கிறது 2011 ஆம் ஆண்டு ஜெனிடிகா என்ற இதழில் வெளியான ஆய்வு. புளிப்பு அதிகமான பொருட்களை சாப்பிடும்போது முகம் கோணலாகும். அதனை மீ போனில் புகைப்படமாக எடுத்து ரசியுங்கள். ஆனால் பழங்களை சாப்பிடுவதை கைவிடாதீர்கள். அறுசுவை உணவுகளும் உடலுக்கு அவசியம்.
நன்றி: லிவ் சயின்ஸ்