கணிதம் மீது நம்பிக்கை வைத்து வென்றேன்!


Image result for amie wilkinson



1980 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆமி வில்கின்சன், ஹார்வர்டு பல்கலையில் இளங்கலை படித்தார். நான் அங்கு படித்தபோது, பெண் பேராசிரியர்களே கணித துறையில் இல்லை. நான் அங்கு ஆசிரியராக பணியாற்றத் தொடங்கியபோது, முதலில் கடினமாக இருந்தது. பின்னாளில், எனக்கு என்மீது நம்பிக்கை வரத்தொடங்கிய பின்தான் வகுப்புகளில் கற்பித்தலை அனுபவித்து செய்யத் தொடங்கினேன் என்று பேசினார் வில்கின்சன்.


இத்துறையில் கணிதவியலாளராக நீங்கள் கண்டறிய கேட்கும் கேள்விகள் என்ன?

இப்போது சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வட்டப்பாதை குறித்தும், அது நிலையானதா, என்பது போன்ற கேள்விகளை கேட்டு விடைகளை ஆராயலாம். பரிணாம வளர்ச்சியில் உருவான சூரியக் குடும்பத்தைப் பற்றிய பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஆராய்ச்சி செய்ய முடியும்.

கணிதவியலாளராக பணியாற்ற ஒருவரின் ஆளுமை முக்கியப் பங்காற்றுகிறதா?

நிச்சயமாக. நெகிழ்வுத்தன்மை கொண்டிருப்பது இப்பணியில் அவசியம். கணித ஆராய்ச்சியில் சவால்களைச் சந்திக்கும் நிலையில் பொறுமை தேவை. இயல்பாகவே கணித ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பிட்ட தர நிலையில் இருப்பார்கள். அதனையே தம் ஆராய்ச்சியில் எதிர்பார்ப்பார்கள். இது ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்து சதவீத அளவில் மாறுபடலாம்.
கணிதத்துறையில் பெண் ஆசிரியராக இருப்பது கடினமாக இருக்கிறதா?

பிறரைப் பற்றி நான் பேசவிரும்பவில்லை. எனக்கு பள்ளியில் எளிதாக இருந்த கணிதம், கல்லூரியில் படிக்கும்போது எளிதாக இருக்கவில்லை. காரணம், எனக்கு அதில் முன்மாதிரியாக யாரும் இல்லை என்பதுதான். தனியாக இத்துறையில் ஆய்வுகளைச் செய்து அதனைப் பற்றிப் பேசுவது கடினமாகவே இருந்தது. உங்கள் மீதான நம்பிக்கையை கைவிடாமல் ஆராய்ச்சிகளைச் செய்தால், நீங்கள் புகழ்பெறுவது எளிது.

கணிதம் நோக்கி உங்களை ஈர்த்தது எது?

நம் சூரிய மண்டலத்தின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அது நிலையாக இருப்பது தெரியும். ஆனால் உண்மையில் அக்குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களும் இயங்கி வருகின்றன. அதில்தான் ஜூலியா செட் அல்லது கொச் ஸ்னோபிளேக் எனும் டைனமிக்கல் அமைப்பு முறைகள்  வருகின்றன. இவை பற்றித்தான் நான் ஆராய்ந்தும் படித்தும் வருகிறேன்.

டைனமிக்கல் அமைப்பு முறையைப் பற்றிக் கூறுங்களேன்.

இயக்கத்தைப் பற்றி படிப்பதுதான் டைனமிக்ஸ் என்று குறிப்பிடுகிறோம். விண்வெளியில் இயங்கும் கோள்களின் இயக்கத்தை எப்படிக் கணிப்பீர்கள்? அதற்கு இம்முறை உதவும். இதில் குறிப்பிட்ட விதிகள் உண்டு.


நேர்காணல்
ஆமி
நன்றி: க்வாண்டா

பிரபலமான இடுகைகள்