இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்!








இந்தியாவில் அதிகரிக்கும் பெண் கொலையாளிகள்!

மூலம்: விக்ரம் சர்மா


ஆபூர்வா சுக்லா


ஆண்கள் பெண்களுக்காக, சொத்துக்காக கொலை செய்து வந்தனர். கடந்த பத்தாண்டுகளாக அதிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதிலும் எந்த உறுத்தலுமின்றி அரசியல், சொத்து ஆகியவற்றுக்காக கணவரை, மகளை கொலை செய்து வருகின்றனர். இதில் ஆபத்தானது, தான் செய்த செயல் குறித்த எந்த வித குற்றவுணர்வும் இன்றி இருப்பதுதான்.


உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வரான என்டி திவாரியின் மகன் கொலையான வழக்கு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்கொலையைப் பற்றிய பின்னணி பத்திரிகையில் வந்ததை விட ஆழமான இருளைக் கொண்டது. 2017 ஆம் ஆண்டு அபூர்வா சுக்லா என்ற பெண்மணி, ரோகித் சேகரைச் சந்தித்தார். சந்திப்பு நிகழ்ந்தது, அறிமுகம் அனைத்தும் மேட்ரிமோனியல் வலைத்தளத்தில்தான். பார்த்த உடனே இருவருக்கும் பிடித்துப்போனது. ஆனால் ரோகித்துக்கு அபூர்வாவின் எதிர்கால பேராசைகள் ஏதும் அப்போதைக்கு தெரியவில்லை.

உயர்நீதிமன்ற வழக்குரைஞர், ஏம்பிஏ படித்தவரான அபூர்வா சுக்லா, ரோகித் சேகரை பெருமையுடன் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மே.12 அன்று நடைபெற்ற திருமணம் அதிக நாட்கள் நிலைக்கவில்லை.


2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று அபூர்வா சுக்லா ரோகித்தை கொலை செய்து விட்டு அமைதியாக அருகிலேயே படுத்து தூங்கினார். பின் போலீசில் விவகாரம் தெரிய வந்தபோதும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. அபூர்வாவுக்கு தன் மாமனாரின் அரசியல் வட்டாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருந்தது. அவர்களின் சொத்துக்களின் மீதும் பேராசை இருந்தது. தற்போது சிறையில் இருப்பதால், அபூர்வாவின் மகனுக்கு சொத்தில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

முக்கியக்காரணம், ரோகித் திருமணம் ஆகும் முன்பே குடிநோயாளியாக இருந்தார். தூக்கமின்மை பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்தார். இதனால்,  தம்பதிகளிடையே இரவில் விவாதங்கள் உச்சகட்டத்தை எட்டின. மேலும் ரோகித்துக்கு தன் உறவுக்காரப் பெண்களிடையேயும் உறவுகள் இருந்தன.ஒருமுறை அபூர்வா, வீடியோ அழைப்பில் அழைக்கும்போது, பாரில் பெண் ஒருவருடன் ரோகித் இருந்தது தெரிய வர உள்ளுக்குள் எரிமலையாகி குமுறியாகி இருக்கிறார் அபூர்வா. மெல்ல இது குறித்த விவாதத்தைத் தொடங்க, அன்றும் மது அருந்திய ரோகித் அபூர்வா குறித்து கெட்ட வார்த்தையை உதிர்த்தார். ஆவேசத்தில் கொலைவெறியான அபூர்வா, தலையணையை எடுத்து ரோகித்தின் முகத்தில் அழுத்....தினார். சில நொடிகளில் ரோகித்தின் ஆவி, பரலோகத்தை அடைந்தது.


நீரஜ் ரோவர் வழக்கு


டிவி ஒன்றில் அதிகாரியாக இருந்த நீரஜ் ரோவர் உயிர் பெண் ஒருவர் மீது கொண்ட காதலால் பறிபோனது. நீரஜ் ரோவர், மரியா சூசைராஜ் என்ற பெண்ணைப் பார்த்தார். பழகினார்.செக்ஸ் வைத்துக்கொள்ளுமளவு நெருக்கமானார்கள். நீரஜின் உறவு, அதிகாரம், செல்வாக்கு மரியாவுக்கு அப்போது அவசியமாக தோன்றியது. ஆனால் முக்கியமான விஷயத்தைக் கூறவேண்டுமே? அப்போது மரியாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்தார். அதிலும் காதலிக்காக கொலை செய்யுமளவு ஆக்ரோஷமானவர் அவர்.

2008 ஆம் ஆண்டு நீரஜ், மரியாவுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு டின்னருக்கு அவர் வீட்டுக்கு வந்தார். விஷயம் எமிலி ஜெரோம் என்ற கடற்படை அதிகாரி, அதுதான் மரியாவின் காதலருக்கு தெரிய வர ரத்தக்களறியானது அந்த இரவு. ஷாப்பிங் மாலில் கத்தி வாங்கிக்கொண்டு வந்து நீரஜின் உடல்களை பாதாம் கேக்கைப் போல கூறு போட்டார் ஜெரோம். அத்தனைக்கும் உதவி செய்தது ஆசைக்காதலி மரியா.  பின் உடல் பாகங்களை நிதானமாக எடுத்துச்சென்று காட்டில் எரித்தனர்.


ஆனால் விவகாரம் போலீசின் விசாரணையில் பல்லைக்காட்டி பிடிபட்டு விட்டது. ஜெரோமுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மரியாவுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. கூடுதலாக நீதிமன்றம் என்ன சகாயம் செய்யும்? அதேதான். 50 ஆயிரம் ரூபாயை நீரஜின் குடும்பத்திற்கு கொடுக்க உத்தரவிட்டது. இதுவல்லவோ நீதி.

நன்றி: டிசி












பிரபலமான இடுகைகள்