கல்வித்துறைக்கு நிதி எவ்வளவு?
பட்ஜெட்டில் கல்வித்துறையின் பங்கு!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் கல்வித்துறைக்கான சில திட்டங்களை நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார். இத்திட்டங்கள் கல்வியின் தரத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.
ரூ.400 கோடி ரூபாய் செலவில் கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய கல்வி நிறுவனங்களின் தரம் உலக கல்வி நிறுவனங்களுக்கு நிகராக உயரும்.
2019-20 ஆம் ஆண்டில் ஸ்டடி இந்தியா எனும் திட்டத்தை அரசு உருவாக்க உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு கல்வி கற்க ஈர்ப்பது நோக்கம். இம்முறையில் இந்தியா முக்கியமான கல்வி மையமாக உருவாகும்.
தேசிய விளையாட்டுக்கல்வி போர்ட்டில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டுக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிகளை முழுமுனைப்புடன் செய்ய, தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை இந்திய அரசு நிறுவ உள்ளது. இந்த அமைப்பு, மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கான நிதியை ஒதுக்கும். கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில்திறன்களைக் கற்றுக்கொடுக்கும் முயற்சிகளும் தொடங்கவிருக்கின்றன.
நன்றி: எஜூகேஷன் டைம்ஸ்