மேட் பத்திரிகை பற்றிய சுவாரசிய தகவல்கள்!
61 ஆண்டுகளாக உலகில் நடக்கும் சீரியசான விஷயங்களை அங்கதம் செய்த மேட் இதழ் மூடப்படுகிறது. காரணம், டிஜிட்டல் முறையில் மேட் டிவி மில்லினிய மக்களிடையே புகழ்பெற்று வருவதும்,சமூக வலைத்தளங்கள் பத்திரிக்கைகளை விட அதிக பகடியாக விஷயங்களை பகிர்ந்துகொள்வதுமே காரணம்.
இனி மேட் பத்திரிகையை டிசி காமிக்ஸ் நிறுவனம் கிளாசிக் இதழாக நடத்த உள்ளது. அதாவது, முன்னர் வெளியான இதழ்களின் தொகுப்பாக இருக்கும்.
ஆல்ஃபிரட் எஃப் நியூமனின் மேட் பத்திரிகை லோகோ, பல் மருத்துவமனை விளம்பரங்களிலிருந்து உருவானது . பின்னாளில் மேட் பத்திரிகையை இந்த லோகோ போட்டாலே, தெரிந்துவிடும் அளவுக்கு பிரபலமாக்கியது அந்த சிறுவனின் குறுநகை புகைப்படம்.
ஜான் எஃப் கென்னடி தேர்தலில் போட்டியிட்ட 1960 ஆம் ஆண்டு மேட் இதழ், இரண்டு கவர்களை வெளியிட்டது. ஒன்றில் மேட் சிறுவன், நாம் ஜெயித்துவிட்டோம் என்று கூறுவது போலிருந்தது. உள்பக்கமாக இருந்த கவரில் ரிச்சர்டு நிக்சனுக்கு ஆபீசில் வரவேற்பு கொடுப்பது போல அச்சிட்டிருந்தார்கள்.
மேட் சிறுவனான ஆல்ஃபிரட்டிற்கு மோக்சி என்ற பெண் தோழியையும் உருவாக்கினர். சில அட்டைகளை அலங்கரித்த இப்பெண்தோழி விரைவில் காணாமல் போனார். காரணம், ஆல்பிரட் போலவே அச்சடித்தாற் போல இவரை உருவாக்கியதுதான். 1957 ஆம் ஆண்டு முதல் மேட் பத்திரிகை விளம்பரம் ஏதுமின்றி உருவாகத் தொடங்கியது. பத்திரிகை முழுக்க கலரில் மாறிய 2001 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் விளம்பரங்களை பிரசுரிக்கத் தொடங்கினர்.
நன்றி: மென்டல் பிளாஸ்