அமெரிக்காவில் மரணதண்டனை திரும்ப வருகிறது!


ஏறத்தாழ மரண தண்டனை என்பது பல்வேறு நாடுகளில் கைவிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு மீண்டும் மரண தண்டனையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

அரசு அட்டர்னியான வில்லியம் பர் , இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளையும் , பெண்களையும் கற்பழித்து கொலை செய்து சமூக அமைதியைக் கெடுத்தவர்கள் இவர்கள் என மரணதண்டனையை நியாயப்படுத்தியுள்ளது அரசு.

சமூகத்தைக் குலைக்கும் மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக அரசு செயல்படும். மேலும் மரண தண்டனை என்பது மாநிலங்களின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க மாநிலங்களில் 29 இல் மட்டுமே மரண தண்டனை அமலில் உள்ளது.

மரணதண்டனை விதிப்பதில் அரசுக்குச் செலவு, தவறான தீர்ப்பு இழப்பீடு, இனவெறுப்பு என பல்வேறு பிரச்னைகள் மறைந்துள்ளன. இத்தனையையும் இனி ட்ரம்ப் அரசு சமாளிக்கவேண்டும். 

நன்றி - சிஎன்என்

பிரபலமான இடுகைகள்