Image result for subhash palekar



நேர்காணல்

சுபாஷ் பாலேகர்

ஷிஸ்கர் ஆர்யா


2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சுபாஷ் பாலேகரின் ஜீரோ பட்ஜெட்டை கையில் எடுத்துள்ளது. இதுபற்றி சுபாஷ் பாலேகர் என்ன சொல்லுகிறார்?

உங்கள் விவசாய முறையை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்துழ

2014 ஆம் ஆண்டு பிரதமர் தேர்தலின்போது  மோடி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக கூறினார். அவர் இந்திய விவசாய கௌன்சில் சில ஐடியாக்களை இதற்காக தனக்கு கூறும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அம்முறையில் விஷயங்கள் நடைபெறவில்லை. நிதி ஆயோக் இதுகுறித்து சர்வே ஒன்றை செய்தது. வேதிப்பொருட்கள் பயன்படுத்தும் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய இரண்டும் எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை என்று இதன் மூலம் தெரிய வந்தது. அதன்பின்னர்தான் என்னுடைய டெக்னிக் மீது நம்பிக்கை வந்துள்ளது.


அடுத்து என்ன நடக்கும்?

இந்த ஆண்டு டில்லியில் இதுபற்றி சந்திப்பு நடைபெற்றது.  நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார், இந்திய விவசாய கௌன்சில் தலைவர்  திரிலோச்சன் மொகபத்ரா, விவசாயத்துறை செயலாளர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். பட்ஜெட்டிற்கு முன்பாக மற்றொரு சந்திப்பு நடைபெற்றது. அப்போது விவசாய அமைச்சராக நரேந்திரசிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரும் என்னுடைய விவசாய முறையை ஏற்றார்.

உண்மையில் ஜீரோ பட்ஜெட் விவசாய முறை என்றால் என்ன?

இதனை நீங்கள் அப்படி கூறக்கூடாது. இதனை இயக்கமாக 2000 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கினோம். இயற்கை விவசாய முறை என்றால் இதில் நீருக்கும், மின்சாரத்திற்கும் பணம் கட்ட வேண்டும். நாங்கள் அரசுடன் செயல்படத் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிறது.

இம்முறையில் ஜீவாமிருதம் என்ற பொருளை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்?

இது உரங்களுக்கு பதிலீடானது. இது எதிர்காலத்தில் எப்படி தொடரும் என்பதைக் கூறமுடியாது. மகாராஷ்டிரத்தில் ஆரஞ்சு தோட்டங்கள் நீரின்றி வறண்டுகிடந்தன. நாங்கள் ஜீவாமிருதம் பொருளை அங்கு பயன்படுத்தி அதனை காய்ந்து போகாமல் காப்பாற்றி ஆரஞ்சுகளை விளைவித்தோம்.

மண்ணுக்குத் தேவையான சத்துக்களை பசுவின் சாணமும், அதன் சிறுநீரமும் தருகிறது. நாங்கள் வேறு கலப்பின பசுக்களின் சாணத்தையும் பயன்படுத்தினோம். ஆனால் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை. காரணம் உள்ளூர் பசுக்களின் சாணத்தில் உயிர்சக்தி இருந்தது. இம்முறையில் ஆந்திரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் விவசாயம் செய்கிறார்கள். இதனை அமல்படுத்த உதவிய சந்திரபாபு  நாயுடு அவர்களுக்கு என் நன்றி. மேலும் கர்நாடகம், சத்தீஸ்கர் , கேரளம் ஆகியோர் இம்முறை குறித்து அக்கறை காட்டி வருகின்றனர்.

இயற்கை விவசாயம் குறித்த உங்கள் பார்வை என்ன?

இயற்கை விவசாயம் குறித்த எந்த கான்செப்டும் நம்முடையது கிடையாது. குப்பைகளை உரமாக்குவது சீனர்களின் அறிவு. மண்புழு உரம் ஆங்கிலேயர்களின் கருத்து. இயற்கை விவசாயம் என்பது முழுக்க இந்தியாவுக்குப் பொருந்தாது. பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கவே உதவும்.


பசுக்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதாக கூறுகிறார்களே?

நீங்கள் கூறுவது வெளிநாட்டு இனங்கள். இதற்கு உள்நாட்டு பசுக்களை காரணம் சொல்லுவது தவறானது. இவை புற்களை மேய்ந்து விட்டு தெருக்களில் திரியும் மாடு இனங்கள். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு இவை உட்படாது.

நன்றி: டைம்ஸ்