குழந்தை தொழிலாளர் முறைக்கு ஆதரவாக பிரேசில் அதிபர்!








View image on Twitter






பிரேசில் வலதுசாரி அதிபர் பொல்சனாரோ, குழந்தை தொழிலாளராக வேலை செய்வது தவறில்லை என்று தன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து அங்கு தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரேசில் நாட்டில் பதிமூன்று வயதுக்கு குறைந்தவர்கள் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. பதினான்கு வயதானவர்கள் வேலைக்கான ஒப்பந்த த்தில் கையொப்பமிடலாம்.  இதற்கு ஆதரவாக ஃபெடரல் நீதிபதி மெர்சிலஸ் பிரெசிலஸ், தானும் பனிரெண்டு வயதில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி பணத்தின் மதிப்பை தெரிந்துகொண்டதாக பதிவிட்டிருக்கிறார்.

இம்முறையில் அதிபர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளது. உலக தொழிலாளர் அமைப்பு, குழந்தை தொழிலாளர்கள் இளம் வயதில் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் மனம், உடல் பாதிக்கப்படுவதாக கூறுகிறது.


பிரேசிலில் தற்போது, 2.5 மில்லியன் பேர் 5 லிருந்து 17 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர் என்று அங்கு எடுக்கப்பட்ட புள்ளியியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர் தொடர்பாக அங்கு ஆண்டுதோறும் 43 ஆயிரம் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடும்ப வறுமை காரணமாக தொழிலில் திணிக்கப்படுவர்களுக்கு அது தவறு என்பதே தெரிவதில்லை. அதிபரே குழந்தை தொழிலாளர் முறை தவறு இல்லை என்று புரிந்துகொண்டு பேசினால் அவர்கள் மீதான புகார்களை இந்த அரசு எப்படி எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என தன்னார்வலர்களும் விரக்தி அடைந்துள்ளனர்.

நன்றி: குளோபல் வாய்சஸ்.

படம் ஜோவோ ராபர்ட் ரிப்பர்