இடுகைகள்

வங்கதேசம்- மனித உரிமை மீறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படக்காரரை கைது செய்த வங்கதேச அரசு!

படம்
அராஜக கைது ! வங்கதேசத்தின் பிரபல புகைப்படக்கலைஞர் ஷகிதுல் ஆலம் , அரசுக்கு எதிராக அல்ஜஸீரா டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . அறுபத்து மூன்று வயதான புகைப்படக்காரர் ஷகிதுல் ஆலம் , பேட்டி வெளியான மறுநாள் காலை பத்துமணிக்கு டாகாவிலுள்ள வீட்டில் 20 போலீசார் அவரை கைது செய்துள்ளனர் . ஊடகத்தில் அரசின் மீதான ஊழல் கறையை ஏற்படுத்துவதாக வங்கதேச ஐ . டி சட்டப்பிரிவு 57 படி கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது . சர்ச்வாரண்ட் இல்லாத மஃப்டி போலீசார் பத்திரிகையாளர்கள் , மனித உரிமையாளர்கள் என பலரையும் மேற்சொன்ன சட்டப்பிரிவில் கைது செய்து சிறையிலடைத்து வருகிறது வங்கதேச அரசு . கைது செய்யப்பட்டு 12 மணிநேரத்திற்கு பிறகு ஆலம் கைதான செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது . கோர்ட் வளாகத்தில் ' போலீஸ் தன்னை லாக்கப்பில் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்தது ' என ஊடகங்களிடம் ஆலம் கூறியது அவரது ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது . போக்குவரத்து விதிகளை சீர்த்திருத்தக்கோரி வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் அங்குள்ள ஊழல் செறிந்த சூழலை உலகுக்கு வெளிச்சமிட்டு காட