இடுகைகள்

நிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை இந்

காலம் கடந்து அடையாளம் காணப்பட்ட உளவியலாளர் ஸ்கின்னர்!

படம்
  இயற்கையாக ஒருவரின் மரபணுவில் குணங்கள், இயல்புகள், பழக்கங்கள் உள்ளன என அறிவியலாளர் சார்லஸ் டார்வின் கருதினார். அவரின் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்ட ஸ்கின்னர், இயற்கை, வளர்ப்பு என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற கூறினார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு பிரச்னைகளை சமாளித்து உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற சூழலை விலங்குகள் முதல் மனிதர்கள் வரை புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல வாழ முடிகிறது. அப்படி வாழ்ந்தால்தான் அந்த விலங்கோ,மனிதரோ தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியும். ஒருவரின் மரபணு, இயற்கையான சுற்றுப்புறசூழல்கள் என இரண்டுமே ஒருவரின் குண இயல்புகளை வளர்த்தெடுக்கின்றன என்று ஸ்கின்னர் கூறினார். இதைப்பற்றிய கருத்துகளை 1981ஆம் ஆண்டு தி செலக்‌ஷன் பை கான்சீக்குவன்ஸ் என்ற கட்டுரையில் எழுதினார். இந்த கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியானது.  1936ஆம் ஆண்டு, ஸ்கின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கிடைத்த வேலையில் இணைந்தார். இந்த முறை எலிகளை கைவிட்டு புறாக்களை நோக்கி நகர்ந்தார். இந்த முறையில் புறாக்கள் வட்ட வடிவில் உள்ள ஒரு பொருளை கடிகாரச் சுற்றினால் உணவு கிட