பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்
பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.
நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது
குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.
சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள்
புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.
செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை
குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.
செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை
இந்த நிலையில் குழந்தைகள் தங்களது செயல்களை போட்டியிட்டு செய்யத் தொடங்குவார்கள்.
அடையாளச் சிக்கல்
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து செயல்படுவார்கள். தான் யார் என்பதை ஆராய முனைவார்கள் என எரிக்சன் கூறுகிறார்.
நெருக்கம்/தனிமை
பதினெட்டு வயது முதல் முப்பது வயது வரையிலான நிலை. இதில் நட்பு, காதல் ஆகிய உறவுகள் இடம்பெறுகின்றன. இதில் நெருக்கமான உறவுகளும் உண்டு. அதனால் உண்டாகும் தனிமை சிக்கலும் உண்டு.
இறுதியான நிலை
உற்பத்தி/தேக்கம் என இரண்டு வகையான நிலைகளிலும மனிதர்கள் இயங்குவார்கள். 35 வயது தொடங்கி அறுபது வயது வரையிலான மனிதர்களை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் எதிர்காலத்திற்கென உழைக்க நினைக்கிறார்கள். கூடவே, தனது உழைப்பில் இருந்து சமூகத்திற்கு திரும்ப கொடுக்கவும் நினைக்கிறார்கள்.
தன்னை மையப்படுத்திய அல்லது விரக்தியான கடைசி நிலை.
இது ஒருவரின் அறுபது வயதில் தொடங்குகிறது. ஞானத்தை ஒருவர் அடையத் தொடங்குகிறார். இந்த நிலையில் பலர் தங்கள் வாழ்க்கையின் நிராசை பற்றி யோசிக்கிறார்கள். கவலைப்படுகிறார்கள்.
erik erikson
ஜெர்மனியின் ஃபிராங்பர்டில் பிறந்தார். இவரது உயிரியல் தந்தையை எவரென அறியாதவர். திருமணம் கடந்த உறவு மூலம் பிறந்தவர். பிறந்து மூன்று வயது ஆனபிறகு, எரிக்கின் அம்மா, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டார். எனவே சிறுவயது தொடங்கி தனது அடையாளம் பற்றிய சிக்கல் இருந்தது. மருத்துவம் படிக்க அம்மா வற்புறுத்தினாலும், கலைப்படிப்பைத்தான் படிப்பேன் என உறுதியாக இருந்தார்.
இத்தாலியில் ஓவியக்கலைஞராக சில காலம் அலைந்து திரிந்து வாழ்ந்தார். பிறகு, வியன்னாவுக்கு சென்று ஒரு பள்ளியில் கலைப்படிப்புகளை கற்றுத் தந்து வந்தார். அன்னா ஃபிராட் மூலம் உளவியல் ஆய்வுமுறைகளைக் கற்றுத் தேர்ந்தார். 1933ஆம் ஆண்டு, ஜோன் செர்சன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டா். அமெரிக்காவின் போஸ்டனுக்கு இடம்பெயர்ந்தார். ஹார்வர்ட், பெர்க்கிலி, யேல் ஆகிய பல்கலைக்கழகங்களில் உளவியல் பற்றிய பாடங்களை கற்பித்தார். தனது பெயரின் பின்பகுதியை எரிக்சன் என தானாகவே மாற்றிக்கொண்டார்.
முக்கிய படைப்புகள்
1950 சைல்ட்ஹூட் அண்ட் சொசைட்டி
1964 இன்சைட் அண்ட் ரெஸ்பான்சிபிலிட்டி
1968 ஐடென்டிட்டி யூத் அண்ட் கிரிசிஸ்
(1902-06-15)15 June 1902
Frankfurt, Hesse, German Empire
Harwich, Massachusetts, U.S.
German
கருத்துகள்
கருத்துரையிடுக