குழந்தைகளின் உளவியல் பற்றிய ஆராய்ச்சியை செய்த ஜீன் பியாஜெட்

 









ஸ்விட்சர்லாந்தின் நியூசாடல் என்ற நகரில் பிறந்தார். இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்டவர். தனது பதினொன்று வயதில் தகவல்களை சேகரித்து ஆய்வறிக்கை எழுத தொடங்கிய மேதாவி. மனித குணங்கள், இயற்கை அறிவியல் பற்றிய பாடங்களை எடுத்து படித்தார். இருபத்தி இரண்டு வயதில் நியூசாடல் பல்கலையில் முனைவர் பட்டம் வென்றார். உளவியலில் ஆர்வம் வந்தது பிற்காலங்களில்தான். பிரான்சில் உளவியல் ஆய்வுகள் பற்றி படித்தார். 1921ஆம் ஆண்டு ஜீன் ஜாக்குயிஸ் ரூஸ்யூ என்ற ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்பில் சேர்ந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வைத்து குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றிய ஆராய்ச்சிகளை செய்தார். 1955ஆம் ஆண்டு, மனித அறிவு, குணங்கள் பற்றிய மையத்தை தொடங்கினார். இறக்கும் காலம் வரை அதன் தலைவராக இயங்கினார். உலகம் முழுக்க உள்ள கல்வி அமைப்புகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். 


முக்கிய படைப்புகள்


1932 தி மாரல் ஜட்ஜ்மென்ட் ஆஃப் தி சைல்ட் 


1951 தி சைக்காலஜி ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ்


1952 தி ஒரிஜின்ஸ் ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் இன் சில்ட்ரன்


1962 தி சைக்காலஜி ஆஃப் தி சைல்ட் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்