இடுகைகள்

வாசிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகம் பயணம் செய்யாத நூல்களின் வழியாக உலகம் சுற்றிய தந்தையின் கதை! - மகனின் நினைவஞ்சலி

 அப்பாவின் லிஸ்ட்  என்னுடைய அப்பா, எப்போதும் பட்டியலை உருவாக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 539 நூல்களை வாசித்திருந்தார். ஞாயிறுதோறும் அவர் பார்த்த புக்நோட் நிகழ்ச்சியின் எபிசோடுகளை ஏழாண்டுகளாக குறிப்பு எடுத்து எழுதி வைத்திருந்தார். இந்த வகையில் 322 நிகழ்ச்சிகள் வருகின்றன.  தினசரி செய்யவேண்டிய வேலைகள் பற்றியும், தனது சிறிய குளிர்பதனப் பெட்டியில் வாங்கி வைக்கவேண்டிய குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் பற்றியும் கூட பட்டியல் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் இறந்துபோன அதிகாலை ஐந்து மணி வரைகூட படிக்கும் நாற்காலி அருகே இருந்து சிறிய நோட்டில் குறிப்புகளை எழுதி வைப்பதை கடைபிடித்து வந்தார். அவர் மறைந்தபிறகே அவருடைய பட்டியல் நோட்டுகளை அடையாளம் கண்டு எடுத்தேன்.  அப்பா, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். மசாசூசெட்சிலுள்ள லோவல் எனும் இடத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா, என்னுடைய தாத்தா, தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருடைய கொள்ளுத்தாத்தா, அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர். கம்பளி ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்பா, சாதுரி...

தூக்குமேடையில் சுருக்குகயிறு நூலை கீழேயுள்ள மின்னூல் தளங்களில் தரவிறக்கி வாசிக்கலாம்....

          https://substack.com/profile/5467650-ar/note/c-99548032

உங்களது கிரியேட்டிவிட்டியை வளர்க்க உதவும் அற்புத நூல்!

படம்
        ஸ்டீல் லைக் என் ஆர்டிஸ்ட் ஆஸ்டின் கிளியோன் வொர்க்மேன் பதிப்பகம் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால், கார்ட்டூன் கலைஞர் எழுதியிருக்கிறார். அதனால் நூலை வாசிக்கும்போது, படங்கள் அதிகமாகவும் எழுத்து குறைவாகவும் உள்ளது. வாசிக்க அதுவே ஆர்வம் தருவதாகவும் அமைவது ஆச்சரியம்தான். பொதுவாக படம் வரைபவர்கள், அதாவது கார்ட்டூன் போடுபவர்களால் எழுதவும் முடியும். அதற்கு அவர்கள் சற்று நூல்களை படித்து பயிற்சி செய்யவேண்டும். அவ்வளவேதான். அந்தவகையில் ஆஸ்டின், தன்னுடைய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூல் முழுக்க புகைப்படங்கள், எழுத்துகள் என அவரது கைவண்ணம் அழகாக உள்ளது. ஒருவர் தன்னுடைய திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என எளிதாக கற்றுக்கொடுக்கிறார். அனைத்துமே எளிமையான சின்ன சின்ன விஷயங்கள்தான். குறிப்பாக, தினசரி நடக்கும் அனுபவங்களை நோட்டில் எழுதுவது, வேலை செய்யும் இடங்களை டிஜிட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என சிலவற்றை செய்தாலே நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடியும் என விளக்கிக் கூறுகிறார். கூடுதலாக நிறைய எழுத்தாளர்கள். ஓவியர்கள், ஓவியக்கலைஞர்களின் மேற்கோள்களு...

பிரதிலிபி தமிழ் தளத்தில் உள்ள இலவச தமிழ் நூல்கள்!

படம்
         வெகு நாட்களுக்குப் பிறகு பிரதிலிபி தமிழ் தளத்திற்கு சென்றபோது கிடைத்த அட்டைப்படங்கள் இவை. என்றோ எழுதி பதிவிட்டு பிறகு மறந்துபோனவை. முத்தாரம் இதழில் வேலை செய்தபோது எழுதுவதற்கு அப்போதைய முதன்மை ஆசிரியர் பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு பிறகு வந்த முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் இதழை முழுமையாக மாற்றி அமைக்க துணை நின்றார். கூடுதலாக, கார்ட்டூன் கதிரின் சோர்வறியாத கடுமையான உழைப்பால், அழகான ஓவியங்களால் இதழ் புதிய பொலிவு பெற்றது. இருவருமாக பணியாற்றிய அந்த காலகட்டத்தை மறக்க முடியாது.  அப்போது தொடர் எழுதி இதழுக்கு உதவிய திரு. இளங்கோ கிருஷ்ணன் (தமிழ்வலம்), திரு.த.சக்திவேல் (ஒரு படம் ஒரு ஆளுமை), திரு. பேராச்சி கண்ணன்(சென்னை சீக்ரெட்ஸ்) ஆகிய நண்பர்களின் உதவியை மறக்க முடியாது. இந்த நூல்கள் பிரதிலிபி தளத்தில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றையும் வாசகர்கள் காப்புரிமை பிரச்னையின்றி வாசிக்கலாம். பகிரலாம்.  https://tamil.pratilipi.com/search?q=anbarasu   இந்த நூல்களை ஆப் தரவிறக்கி வாசிக்கும் சிக்கல் உள்ளதா, வலைத்தளத்திலேயே வாசிக்கலாமா என்று ...

பெண்கள் வாசிப்பது என்பது முக்கியமான அரசியல் செயல்பாடு! - ஆகிருதி மந்த்வாணி

படம்
                நேர்காணல் எழுத்தாளர், ஆய்வாளர் ஆகிருதி மந்த்வாணி இலக்கியம் அல்லது க்ரைம் சார்ந்த நூல்கள் அல்லாமல் நடுநிலை இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பியது ஏன்? இந்தி கிரைம் எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதக் நூல்களைப் பற்றித்தான் முதலில் ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படித்தான்ஆராய்ச்சியும் தொடங்கியது. அவரது நூல்கள் வாசிக்க நன்றாக இருக்கும். விலையும் கூட அதிகம். ஆனால், அவரது நூல்களை வாசிக்கிறேன் என்று யாரும் தைரியமாக கூற மாட்டார்கள். மறைத்து வைத்து படிப்பார்கள். இப்போது அதை வெளியில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தி மொழி இதழ்களை பற்றி பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேசியமொழி இந்தி என்ற அடிப்படையில் உருவானது. தேசியவாத கண்ணோட்டம் கடந்த நடுநிலை இதழ்களை, பொதுஅறிவு தகவல்களை வழங்கும் வார, மாத இதழ்களை மக்கள் வாசித்துள்ளனர். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வாசிப்பார்கள். எனவே, நான் இடைநிலை இதழ்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது சரியென தோன்றியது. இடைநிலை இதழ்களின் வெளியீடு, அவற்றை வாசித்த பெண் வாசகர்களைப் ...

மழைபேச்சு - உங்களுடன் ரோனி - புத்தக விமர்சனங்களுக்கான பாட்காஸ்ட்

படம்
  மடிக்கணினி பழுதாகி கிடந்தபோது தொடங்கிய முயற்சி. லினக்ஸ் மின்டில் பழுது என நினைத்தேன். அதில் பழுதேதும் இல்லை. கணினியின் சார்ஜிங் பாய்ண்டில்தான் பிரச்னை. அதை சிப்டிரானிக்ஸ் நிறுவனத்தினர், பழுதுபார்த்து கொடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் தொடங்கிய வேலை இது. இப்போது மழைப்பேச்சு பாட்காஸ்டில் மொத்தம் பதினாறு குரல் பதிவு கோப்புகள் உள்ளன. அவை அனைத்துமே படித்த நூல்களைப் பற்றியவை. நூல் விமர்சனங்களை படிக்க நேரமில்லை என்பவர்கள் ஸ்பாட்டிஃபை சென்று அதன் வழியாக மழைப்பேச்சு பாட்காஸ்டை கேட்டுக்கொள்ளலாம்.  நூலைப் பற்றி எழுதுவது எளிது. ஆனால் பேசுவது என்பது கடினமான ஒன்று. நேர்த்தி கைகூடி வர முயல்கிறேன். வாய்ப்பிருப்பின் கேளுங்கள். https://podcasters.spotify.com/pod/show/arasukarthick நன்றி செபியா நந்தகுமார் கார்ட்டூன் கதிர் கன்வா.காம் சிப்டிரானிக்ஸ் குழு

தெரிஞ்சுக்கோ - விளையாட்டு, நூல் வாசிப்பு

படம்
  தெரிஞ்சுக்கோ – விளையாட்டு   டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் எடை 2.7 கிராம். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளில் மிக இலகுவான எடை கொண்ட பந்து இதுவே. ஸ்நூக்கர் விளையாட்டில் எட்டு நிறங்களில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெள்ளை நிறப்பந்தும் உள்ளடங்கும். குறைந்த தொலைவிலான ஸ்கேட்டிங் பந்தயங்களில், விளையாட்டு வீரர்கள் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில இயங்குகிறார்கள். 1981-1986 காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்ற   ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், 555 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற சோதனையை நடத்தினார். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பயன்படுத்தும் பலகையின் அகலம் பத்து செ.மீ. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டி பதினொரு மணி நேரம், நாற்பது நிமிடங்களுக்கு நடைபெற்றது.   பாட்மின்டன் போட்டியில் பயன்படுத்தும் பந்து, பதினாறு வாத்துகளின் இறகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதன் எடை 5 கிராம்.   நூல் இந்திய எழுத்தாளர் விக்ராந்த் மகாஜன் ஒரே முறையில் தனது “யெஸ் தேங்க்யூ யுனிவர்ஸ...

வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

படம்
  ஊக்கம் மின்னல் 23/10/2022 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள். முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார். இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந...

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் ...

நூல்முகம் - நூல்களின் விமர்சனக் கட்டுரைகள் - இன்டர்நெட் ஆர்ச்சீவ் வலைத்தளத்தில் வெளியீடு

படம்
  இந்த நூல் முன்னமே பிரதிலிபி தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை படிக்க ஆப்பைத் தரவிறக்கி... உறுப்பினரை பதிவுசெய்து என நிறைய தொல்லைகள் உண்டு. எனவே, இப்போது இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் நூல் வெளியிடப்படுகிறது. நூலை தரவிறக்கி சுதந்திரமாக வாசிக்கலாம். வணிகரீதியாக பயன்படுத்தக்கூடாது. இலவச வாசிப்பு தளங்கள் அதன் நோக்கத்தில் சிறப்பானவை. ஆனால் அவையும் கூட ஒருகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் தனிநபரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடத் தொடங்குகின்றன. இதனால் சமூக, கலாசார தன்மைக்கு வேறுபட்ட புதிய சிந்தனையிலான நூல்கள் வெளியாவது புறக்கணிக்கப்படுகிறது. திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஏறத்தாழ இந்தியாவில் அறிவிக்கப்படாத நடைமுறையாகிவிட்ட தடை கலாசாரம் போல...  எனவே இந்த வகையில் இனி  கோமாளிமேடை - ஆராபிரஸ் வெளியிடும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை கொண்ட நூல்கள் இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வாசகர்கள் அங்கிருந்து நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.   இந்த தளம் நூலை எளிதாக வாசித்துப் பார்க்க உதவும்படி வடிவமைக்கப்பட்டிரு...

பின்தங்கும் ஆங்கில நூல்கள் வாசிப்பு!

படம்
  திறமைக்கான வாய்ப்பு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மருத்துவர் முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம் . அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும் . அதில் சாதித்து வெல்ல முடியும் . நான் வேலை செய்யும் இதழின் பொறுப்பாசிரியர் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர் . இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம் . எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது . ஆனால் , நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது . இதுவரையிலும் பிறரிடம் நான் செய்த வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது . இப்போது முழங்கால் வலி மட்டுப்பட்டுள்ளது . இதனால் நடக்க முடிகிறது . உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன் . இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன் . அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதால் ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம் எனத் தோன்றுகிறது . அன்பரசு 13.8.2021 மயிலாப்பூர் ------------------------------------------------------------------------------ டிஜிட்டல் வடிவில் மாறும் வாசிப...

வாசிக்க வேண்டிய நூல்கள்! இயற்கை சார்ந்தவை

படம்
  வைல்டர்  மில்லி கெர் ப்ளூம்ஸ்பரி பத்திரிகையாளர், கானுயிர் பாதுகாப்பாளர் மில்லி கெர் எழுதிய நூல். காடுகளில் செயல்படுத்தும் திட்டங்கள், காடுகளை வளர்ப்பது ஆகியவை பற்றி நூலில் கூறியுள்ளார். அர்ஜென்டினா தேசியப் பூங்காக்களுக்கு ஜாகுவார்கள் கொண்டு வரப்பட்டதையும், தென் ஆப்பிரிக்காவில் எறும்பு தின்னிகள் கொண்டு வரப்பட்டதையும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் வில்லி கெர்.  இல்லுமினேட்டட் பை வாட்டர்  மலாச்சி தாலக் டிரான்ஸ் வேர்ல்ட் மீன் பிடிப்பது அனைவருக்கும் ஏற்றதல்ல. ஆனால் அதை செய்பவர்கள் அனுபவித்து செய்வார்கள். எழுத்தாளர் மலாச்சி தாலக்கும் ஆங்கில கணவாயில் தான் மீன் பிடித்த அயர்ச்சியான அனுபவத்தை நூலாக எழுதியிருக்கிறார். கலாசார வேறுபாடுகள் இந்த பணியில் எப்படி இருக்கின்றன என்பதையும் கூறியிருக்கிறார்.   வைல்ட்லிங்க்ஸ்  ஸ்டீவ் பேக்ஷால், ஹெலன் குளோவர்  ஜான் முர்ரே  குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து செய்யவேண்டிய பல்வேறு ஆக்டிவிட்டிகள் நூலில் உள்ளன. அவற்றை வீட்டைவிட்டு வெளியில் தான் செய்யவேண்டும். இந்த நூல் அதுபோல நிறைய செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. இதை செய்தால்...

சிபாரிசு ஏற்படுத்தும் சங்கடங்கள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3 13.8.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? முத்து செல்லக்குமார் போன்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் கவலைப்படவே வேண்டாம். அவர்களுக்கான வாய்ப்பு கேட்காமலேயே அவர்களுக்கு கிடைக்கும். அதில் சாதித்து வெல்ல முடியும். நான் வேலை செய்யும் இதழின் ஆசிரியர் வலதுசாரி கருத்து கொண்டவர். இவர் போன்றவர்களிடம் திறமையைத் தாண்டி கவனமாக நடந்துகொள்வது அவசியம். எனக்கு வேலை சிபாரிசில் தான் கிடைத்தது. நான் பிறருக்கு சிபாரிசுகளை செய்வது கிடையாது. இதுவரையிலும் வேலை சிபாரிசுகள் பெரும் சங்கடங்களையே உருவாக்கியுள்ளது.   இப்போது முழங்கால் வழி மட்டுப்பட்டுள்ளது. இதனால் நடக்க முடிகிறது. உடல் பலவீனமாக இருப்பதை உணர்கிறேன். இதனால் முட்டை சாப்பிட முயன்று வருகிறேன். அலுவலகத்திற்கு நடந்து சென்று வருவதை ஈடுகட்ட சரியாக சாப்பிடுவது அவசியம்.  அன்பரசு  4 22.8.2021 அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலைப்பளு காரணமாக நேரம் ஒதுக்கி பேச முடியவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து வலைப்பூ எழுதுவதில்லை என முடிவு செய்துள்ளேன். எனவே அறைக்கு வந்துதான் செய...

அரசுபள்ளி மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் நடமாடும் நூலகம்!

படம்
  வாசிப்பை வளர்க்கும் நூலகம்!  திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆடையூர் பஞ்சாயத்து பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.  பைக்கில் வரும் நூலகருக்காகத்தான் மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நூலகர்,நடமாடும் நூலகம் என எழுதப்பட்ட பெட்டியிலிருந்து நூல்களை எடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கிறார். 15 நாட்களுக்குள்  நூல்களை படித்துவிட்டு திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.  மாணவர்களுக்கு, இதற்கென தனி அடையாள அட்டை உண்டு.  குறிப்பிட்ட கால அளவில் பத்து நூல்களை படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஒரு நூலை வழங்குகிறார் நூலகர்.  இந்த நடமாடும் நூலக திட்டத்தை அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருவது, ரெஜன்பூக் இந்தியா பௌண்டேஷன் (Regenboog India Foundation). இதனை நிறுவி நடத்தி வருபவர், மதன் மோகன்.  2006ஆம் ஆண்டு மதன் மோகன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியில், மனநிறைவு கிடைக்காததால் , வேலையை விட்டுவிலகி சமூகப் பணிகளைச் செய்ய நினைத்தார்.   அப்போது திருவ...

இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

படம்
  ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர் கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று.  சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.  2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகார...

இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

படம்
  ஐ பாட் எ மௌண்டைன் தாமஸ் ஃபிர்பேங்க் ஷார்ட் புக்ஸ்  1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார்.  தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ்  அலிசன் ரிச்சர்ட் ஹார்ப்பர் கோலின்ஸ்  லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள்.  டீர் மேன் ஜியோப்ராய் டெலோர்ம் லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப் புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.  வைல்ட் சிட்டி ஃப்ளோரன்ஸ் ...

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டே...

ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
3.12.2021  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான்.  டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன்.  நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார்.  அன்பரசு 3.12.2021 -----------------------------------...