மழைபேச்சு - உங்களுடன் ரோனி - புத்தக விமர்சனங்களுக்கான பாட்காஸ்ட்

 


மடிக்கணினி பழுதாகி கிடந்தபோது தொடங்கிய முயற்சி. லினக்ஸ் மின்டில் பழுது என நினைத்தேன். அதில் பழுதேதும் இல்லை. கணினியின் சார்ஜிங் பாய்ண்டில்தான் பிரச்னை. அதை சிப்டிரானிக்ஸ் நிறுவனத்தினர், பழுதுபார்த்து கொடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் தொடங்கிய வேலை இது. இப்போது மழைப்பேச்சு பாட்காஸ்டில் மொத்தம் பதினாறு குரல் பதிவு கோப்புகள் உள்ளன. அவை அனைத்துமே படித்த நூல்களைப் பற்றியவை. நூல் விமர்சனங்களை படிக்க நேரமில்லை என்பவர்கள் ஸ்பாட்டிஃபை சென்று அதன் வழியாக மழைப்பேச்சு பாட்காஸ்டை கேட்டுக்கொள்ளலாம். 

நூலைப் பற்றி எழுதுவது எளிது. ஆனால் பேசுவது என்பது கடினமான ஒன்று. நேர்த்தி கைகூடி வர முயல்கிறேன். வாய்ப்பிருப்பின் கேளுங்கள்.

https://podcasters.spotify.com/pod/show/arasukarthick

நன்றி

செபியா நந்தகுமார்

கார்ட்டூன் கதிர்

கன்வா.காம்

சிப்டிரானிக்ஸ் குழு


கருத்துகள்