Time 100 - செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலிலிருந்து மலிவான விலை மருந்து விற்பனையாளர் வரை...

 










டைம் 100
செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ்

பாலியல் சீண்டலுக்கு எதிரான போர் - ஜென்னி ஹெர்மோஸா
jenni hermosa
2023ஆம்ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றியை விட பரிசு பெறும் மேடையில், நடந்த அவலமான விஷயம் உலகமெங்கும் பிரபலமானது. ஸ்பானிஷ் நாட்டு கால்பந்து கூட்டமைப்பின் தலைவரும், பெண்கள் கால்பந்து அணியின் தலைவருமான லூயிஸ் ரூபியேல்ஸ், கேப்டன் ஜென்னியின் முகத்தை பலவந்தமாக பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். அதை பல நூறு டிவி சேனல்களின் கேமராக்கள் பதிவு செய்தன. அதற்குப் பிறகுதான் லூயிசுக்கு மண்டகப்படி தொடங்கியது.

உலகம் முழுக்க பெண் விளையாட்டு வீர ர்கள் மீது பாலியல் சீண்டல்கள், சுரண்டல் நடந்து வருகிறது. நான் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வந்தேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டனான ஜென்னி, தனக்கு நேர்ந்த அச்சம்பவத்தை வெளிப்படையாக கூறி, தனக்கு எதிராக செய்யப்பட்ட தடைகளை உடைத்தார். லூயிசுக்கு எதிராக அவர் உண்மையைப் பேசக்கூடாது என அதிகார மட்டம் பல்வேறு முயற்சிகளை செய்தது. உலகிலுள்ள கால்பந்து அணிகளின் நிர்வாகம் என்பது ஆண்களின் கரங்களிலேயே உள்ளது. இதனால் பெண்களை அவர்கள் தங்கள் சுயநலத்திற்கு, சுரண்டலுக்குப்  பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் அனைத்து வீரர்களும் ஒன்று திரண்டு பலாத்கார முத்தத்திற்கு எதிராக போராட, வேறு வழியில்லாத லூயிஸ் தனது பதவியை விட்டு விலகினார். கால்பந்து கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஜென்னியின் பெயர் பொறித்த ரப்பர் பேண்டுகளை கையில் அணிந்துகொண்டு அவர் பின்னே நிற்கவும் தயாராக இருக்கிறேன்.

மனா ஷிம்
2

புறக்கணிக்கப்படும் சிறுபான்மையினருக்கான ஊக்க குரல் - ரோசன்னா ஃபிளேமர் கால்டெரா
rosanna flamer caldera

இலங்கையில் பால் புதுமையினருக்கான உரிமைப் போராட்டத்தை ரோசன்னா, தோராயமாக இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 2022ஆம் ஆண்டு,  இலங்கை அரசு தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை தடைசெய்தது. இந்த செயல்பாடு, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் விளைவாக, பால்புதுமையினர் விவகாரம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசியலமைப்புக்கு எதிராக பால் புதுமையினர் சட்டம் உருவாகி இருப்பதாக கருத்து கூறினார். மற்றபடி சட்டத்திற்கு எதிராக வேறெதையும் கூறவில்லை.
உச்சநீதிமன்றம், ரோசன்னாவின் ஈக்வல் கிரவுண்ட் என்ற அமைப்பு தொடுத்த வழக்கிற்கு அவருக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு மூலம், தன்பாலின சேர்க்கை என்பது குற்றத்திற்குரிய தண்டனையாக இனி பார்க்கப்படாது. தன்பாலினச்சேர்க்கைக்கு உடனே சமூகத்தில் ஆதரவு கிடைக்காவிட்டாலும் இதுவரை இருட்டில் இருந்த அந்த பால் சிறுபான்மையினருக்கு இது மிகப்பெரிய முன்னேற்றறம். ரோசன்னாவிற்கு பால்புதுமையினர் விவகாரத்தில் ஐ.நா சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

சான்யா மன்சூர்
3
பெண்களின் ஊக்கசக்தி - ஜூலியன் லூசென்ஞ்ச்
julienne lusenge

ஒரு சமூகம் வலிமையாக இருக்க சிறுமிகளும், பெண்களும் வலிமையாக இருக்கவேண்டும். ஜூலியன் இந்த உண்மையை கைக்கொண்டு செயல்பட்டு வருகிறார். காங்கோ நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலின பாகுபாடு, அடிப்படை உரிமைகள் மறுப்பு ஆகிய பிரச்னைகளுக்கு எதிராக போராடி வருகிறார். சாப்படி என்ற தன்னார்வ அமைப்பின் துணை நிறுவனர். அதன் வழியாக பெண்களுக்கு ஊக்கமளித்து பாலியல் வன்முறைகளிலிருந்து மீட்டு மறுவாழ்வளிக்க உழைத்து வருகிறார்.

2023ஆம் ஆண்டு ஐ.நா சபை, ஜூலியன்னின் பணிகளை அங்கீகரித்து மனித உரிமைப் பிரிவில் பரிசளித்து கௌரவித்தது. அரசியலில் பெண்களின் பங்கேற்பிற்காகவும் திட்டமிட்டு வருகிறார். போர் ஏற்படும்போது பெண்களே முதலில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த சூழ்நிலையை அவர்களால் தடுக்கவும் முடியும் என்று ஜூலியன் கூறினார்.
வோல்கெர் துர்க்
4

சர்வாதிகாரத்திற்கு எதிராக உயரும் கரம் - ஃபிராங்க் முகிஷா
frank mugisha

உகாண்டாவின் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களுக்காக பாடுபட்டு வருகிறார். ஒருவகையில் அரசால் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்படும் சூழ்நிலையிலும் அதன் சர்வாதிகார சட்டங்களை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளவும் தயங்காத நபர்.

வேலை பறிபோவது, நண்பர்களை இழப்பது, கொலை மிரட்டல் என எந்த துன்பம் வந்தாலும் தோளில் குறுகல் இல்லாமல் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களுக்காக உழைத்து வருகிறார் முகிஷா. இத்தகைய மக்களுக்காக ஐஸ்பிரேக்கர்ஸ் உகாண்டா என்ற அமைப்பைத் தொடங்கி பரப்புரை செய்து வருகிறார். கடந்த ஆண்டு, உகாண்டா அரசு தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்றி நடைமுறைப்படுத்தியது. அதை முகிஷா நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, எதிர்தரப்பில் அவரையொத்த நண்பர்கள், அமைப்புகளுடன் இணைத்து வாதிட்டு வருகிறார்.
செக்சுவல் மைனாரிட்டிஸ் உகாண்டா என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கியபோது, உகாண்டா அரசு அதை பாகுபாட்டுடன் அங்கீகரிக்க மறுத்தது. அப்போதும் ஃபிராங்க் தயங்கவில்லை. நேரடியாக நீதிமன்றம் சென்று வழக்குப் போட்டு தனக்கான நீதியைப் பெற்றார்.

பாலின சிறுபான்மையினருக்காக ஃபிராங்க் முகிஷா உழைத்து வருகிறார். இவரது செயல்பாடுகளை இனம் கண்டு ராபர்ட் எஃப் கென்னடி மனித உரிமை விருது வழங்கப்பட்டது. ஒருமுறை நோபலின் அமைதி பரிசுக்கு கூட பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

ஹிலாரி ரோதம் கிளின்டன்

5

பாலியல் வன்முறையாளருக்கு எதிரான துணிச்சல் குரல்

சாக்‌ஷி மாலிக்

இந்திய குத்துச் சண்டை வரலாற்றில் முதல் பெண் வீரர். போட்டிகளில் பங்கேற்று நம்பிக்கையுஉடன் ஒலிம்பிக் மெடலையும் வென்றெடுத்தார். அதற்காக அவர் கடந்து வந்த பாதை எளிதானது என்று கூறமுடியாது. கடந்த 2023ஆண்டு தொடக்கத்தில் அவரும் பெண் மல்யுத்த வீரர்களும் இணைந்து டெல்லியின் ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் கூடி போராடத் தொடங்கினர். காரணம், பெண் வீரர்களுக்கு குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் பிர்ஜ் பூஷன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் வெளியே வந்தாலும் ஒன்றிய அரசு அதை மறைக்கவே முயன்றது. அரசு ஆதரவு ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் மூடி மறைக்கப்பட்டன.  பிர்ஜ் பூஷன், ஆளும் மதவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர். எனவே, அவர் மீது பெரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

மல்யுத்த வீரர் என்ற தொழில்வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறிய சாக்‌ஷி மாலிக், குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக வேறு ஒருவர் மாற்றப்பட்டதும் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். புதிய தலைவர் வேறு யாருமில்லை, பாலியல் சீண்டல்களை செய்த முன்னாள் தலைவரின் விசுவாசி. பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு அவர்களையே குற்றவாளியாக்கும் இந்தியா போன்ற நாட்டில் சாக்சி மாலிக்கின் குரல்கள் துணிச்சலாக ஒலித்திருப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது.  

நிஷா பகுஜா
6

அனைவருக்கும் மலிவான விலை மருந்து
மார்க் க்யூபன்


மருந்துகளை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பது முக்கியமானது. அப்படி கண்டுபிடித்த மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அதிக விலை வைத்து விற்கின்றன. இதை எந்த நாட்டு அரசும் எதிர்த்து போராடுவதில்லை. காரணம், ஆராய்ச்சிக்காக மருந்துகள் பல கோடி ரூபாய்களை செலவிடுகி்ன்றன. இத்தொகையை மருந்துகளை விற்றுத்தான் பெற வேண்டும். ஆனால், அதேநேரம் உயிரைக் காக்கும் மருந்துகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலை, நோய்த்தொற்று என எப்படியான சிக்கலான நிலை ஏற்பட்டாலும் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் குறைத்துக்கொள்வதில்லை.

இந்த இடத்தில்தான் மார்க் க்யூபன், காஸ்ட் பிளஸ் டிரக் கம்பெனி தொடங்கி ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளைப் பெற உதவி வருகிறார். மருத்துவதுறை குண்டர்களுக்கு எதிரான சவால்களை மார்க் துணிச்சலாக அளித்து வருகிறார். மருத்துவ தேவை இருப்பவர்களுக்கு குறைந்த விலை மருந்துகள் என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். சமத்துவம் என்பது அடைவதற்கு கடினமான பாதை. இருந்தாலும் சளைக்காமல் மனிதநேயத்தின் வழியாக சென்று சேர உதவி வருகிறார் மார்க் க்யூபன்.

ஆஷ்டன் கட்சர்

நன்றி

டைம் 100


கருத்துகள்