பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

 

 

 

 


 

 

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன?

இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம்.

சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல்.

இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது.

பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும். செவ்வாய்க்கு சொந்தமான நிலவுகளான போபோ, டெய்மோ என இரண்டுமே இருபது கி.மீ., பத்து கி.மீ. என்ற அளவுகளைக் கொண்டவை.

இவற்றை பூர்த்தி செய்யும்போது மட்டுமே அதை நிலவு என அறிவியல் கூட்டம் ஒப்புக்கொள்ளும். மேற்சொன்ன விதிகள் இல்லாதபோது கோள்களை சுற்றும் நிலவுகளை எண்ணிக்கணக்கிட நேரம் போதாது. அந்தளவுக்கு நிலவுகள் பால்வெளியில் உள்ளன என்று ஆகிவிடும்.  

pinterest


கருத்துகள்