டைம் 100 - அகதிகளுக்கு உணவகத்தில் வேலை கொடுத்து ஆதரிக்கும் மனிதநேய உணவக உரிமையாளர்

 

 

 

 



 

 

அஸ்மா கான்
உணவக உரிமையாளர், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ்
asma khan

அஸ்மா கான், லண்டனில் டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான இந்திய உணவு வகைகள் சுவையாக கிடைக்கின்றன. அது விஷயமல்ல. அதை அவர் தனக்கு கிடைத்த பயிற்சி மூலம் கூட செய்யலாம். அந்த உணவுகளை தயாரிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அத்தனை பேருமே தெற்காசியாவில் இருந்து மேற்கு நாடுகளுக்கு பிழைக்க வந்த அகதிகள். அவர்களுக்கு முறையான உணவு தயாரிப்பு பயிற்சி கூட இல்லை. ஆனால், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தனது டார்ஜிலிங் உணவகத்தை தனித்தன்மை கொண்டதாக மாற்றி வருகிறார். டாப் செஃப் என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு சுவையான தனித்தன்மை  கொண்ட உணவு வகைகளை தயாரித்து வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார் அஸ்மா கான். தற்போது, டிஃபன் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்பட தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். இதில், அஸ்மா இந்திய உணவு வகைகளைப் பற்றி விளக்கி பேசுகிறார். அஸ்மா சிறந்த தொகுப்பாளர் மட்டுமல்ல, அற்புதமான உணவுசேவையை வழங்கி வருபவர். குறிப்பிடத்தக்க அம்சமாக மக்களைப் பற்றி அன்பும் அக்கறை கொண்டவராகவும் உள்ளார்.

டைம் 100
பத்ம லஷ்மி


 

கருத்துகள்