தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் = உலக கலாசாரத்தையே மாற்றிப்போட்ட ஒற்றைக்கடை!
The McDonaldization of society - into the digital age -- George Ritze தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் ஜார்ஜ் ரிட்ஸ்சர் சேஜ் ப.368 மெக்டொனால்ட் என்பது அமெரிக்காவிலுள்ள துரித உணவகம். இந்த கடை முதன்முதலாக பிரான்சைஸ் என்ற வணிக உத்தியை வெற்றிகரமாக பயன்படுத்தி வணிக வெற்றியைப் பெற்றது. இன்று அமெரிக்காவின் முக்கியமான அடையாளம் மெக்டொனால்ட் உணவகம். இதை தொடங்கியவர்களை விட வாங்கி விரிவுபடுத்தியவரே உலகளவில் புகழ்பெற்றார். அதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு நவீன முறைகளே காரணம். இந்த நூல் மெக்டொனால்ட் கடை எப்படி உணவு வணிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறவில்லை. மெக்டொனால்ட் என்ற ஒற்றைக் கடை அமெரிக்க சமூகத்தில் உறவில், உணவில், தொழிலில், கல்வியில், தனிப்பட்ட பொருளாதாரம் என பல்வேறு வகையில் ஏற்படுத்திய பாதிப்பு, செல்வாக்கு பற்றி நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜார்ஜின் நூல், அவர் எடுத்துக்கொண்ட ஆய்வு மையப்பொருள் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறார். மெக்டொனால்ட் உணவுகளை ஒருவர் உட்கார்ந்த...