சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!

 


A History of Food
Culture in China
By Rongguang Zhao
Translated by Gangliu Wang
and Aimee Yiran Wang

2015

இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது. 

நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மதுபானங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. 

சோயாபீன்ஸை பயன்படுத்தி சாஸ் தயாரிக்கும் முறை ஆர்வமூட்டுவதாக உள்ளது. சீனாவிலுள்ள சாஸ் வகைகள்,ஜப்பானுக்கும் சென்று மக்களை கவர்ந்துள்ளது. பல்வேறு சாஸ் வகைகளை இன்று சீன மக்கள் தாங்கள் குடியேறும் நாடுகளிலும் பிரபலமாக்கி வருகிறார்கள். கறியில் சாஸ் செய்து அதை பதப்படுத்தி வைக்கும் முறையை வியப்பு தருகிறது. சீனர்கள் உணவில் காய்கறிகளோடு பல்வேறு மூலிகைகளையும் பயன்படுத்தி சமைக்கிறார்கள். சோறு முக்கியமான உணவுப்பொருள். அத்தோடு பன்றி, மாடு, கோழி, ஆடு என ஏராளமான இறைச்சிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். 

சீனா பெரிய நாடு. அங்குள்ள பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்களுக்கு உணவுப்பொரு்ட்கள் மெல்ல பரவி அதை அவர்கள் உள்ளூர் தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக நாடோடி இனக்குழுவினர். சீனாவில் எடுக்கப்படும் பல்வேறு டிவி தொடர்களில் ஹாட்பாட் சமையல் இல்லாமல் அதை முடிப்பதில்லை. அதைப்பற்றிய தகவல்களும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன. ஹாட்பாட்டிற்கான சூப், அதில் இறைச்சி துண்டை எப்படி நனைத்து சாப்பிடவேண்டும். கறித்துண்டு எப்படி நறுக்கப்படவேண்டும் என ஏராளமான அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் பின்தொடர்கின்றன. 

நூலின் இறுதிப்பகுதியில் சீனர்களின் உணவு மேசை நாகரிகம் பற்றி விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். அந்த நடத்தையும் கூட நேர்த்தியாகவே உள்ளது. விருந்துக்கு சீனர்களை அழைக்கும் முறைதான் சற்று பயம் தருவதாக இருக்கிறது.மூன்று முறை அழைக்க வேண்டும் என்ற மரபு உள்ளது. சீனமொழியைக் கற்பது, அதன் கலாசாரத்தை அறிவது அந்த நாட்டின் மக்களோடு இணைவதற்கு உதவக்கூடும். உள்நாட்டு மக்களை சாதி,மதம், இன ரீதியாக பிரித்து இழிவு செய்துவிட்டு மக்கள் விடுதலை ராணுவப்படையிடம் பம்பி, பெரிய பொருளாதாரம் என பேட்டி கொடுப்பது ஆண்மை கிடையாது என்பதை இந்தியா உணர வேண்டும். கலாசார ரீதியாக சீனாவை புரிந்துகொண்டு நட்பாக நடந்துகொள்வதே புத்திசாலித்தனம். 

அந்த வகையில் சீனாவின் உணவு கலாசாரம் பற்றிய நூல், நமக்கு சீன உணவுகளைப் பற்றிய ஏராளமான தகவல்களை அளிப்பதோடு மக்களைப் பற்றியும் மன்னர் வம்சங்கள், பேரரசர்களாக இருந்தவர்கள் தேநீரை விரும்பி அதற்கென நூலை எழுதுவது என பல்வேறு சுவையான செய்திகளை அறிய முடிகிறது. 

கோமாளிமேடை குழு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!