இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!



பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது.




இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.




அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும். இந்துக்கள் இந்தியாவுக்கும் சென்றனர். இச்சமயத்தில் தீண்டத்தகாதவர்களுக்கு உதவும் வகையில் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.




டாக்டர் அம்பேத்கர், தீண்டத்தகாதவர்களுக்கு தனி தேர்தல் தொகுதிகள் கேட்டார். உடனே இந்திய ஆளும் வர்க்கம், மகாத்மாவை தூண்டிவிட அவர் சாகும்வரை உண்ணாவிரதம் என போராட்டத்தை தொடங்கினார். அம்பேத்கர் தனது கோரிக்கையை விலக்கிக்கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த தீண்டத்தகாதவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என மிரட்டப்பட்டனர். இப்படியான மிரட்டல் காரணமாக அம்பேத்கர் தனது முடிவில் இருந்து பின்வாங்க நேரிட்டது.




இதுபற்றி தலித் வாய்ஸ் இதழில் கவிதா குமாரி எழுதியுள்ள கருத்தைப் பார்ப்போம். இட ஒதுக்கீடு என்பது யார் வழங்கிய அன்பளிப்பும் கிடையாது. அதற்கு தீண்டத்தகாதவர்கள் ரத்தத்தால் பெரும் விலையைக் கொடுத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர், அவரது ஆதரவாளர்கள் இட ஒதுக்கீடு பற்றிய உரிமைகளைக் காக்க நிலைநாட்ட ஏராளமான உயிர்தியாகங்களை செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் மேல்சாதியினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செய்த வன்முறையில் ஏராளமான தீண்டத்தகாத மக்கள் பலியாயினர். நமது உரிமைகள் மேல்சாதியினர் பறிக்க முயன்றால் நாடு முழுக்க சாதி சண்டை பரவலாக நடக்கும் என்பதால், நாடாளுமன்றம், அரசின் சட்ட அமைப்பு இட ஒதுக்கீடு உரிமைகளை பாதுகாக்கிறது. அதன் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பணிகளை வழங்குகிறது.




1984ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போரை மேல்சாதியினர் தொடங்கினர். அதற்கு எதிராக காவல்துறையில் கீழ்மட்டத்தில் உள்ள தீண்டத்தகாதவர்கள் புரட்சி செய்தனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வன்முறை பற்றி எழுதிய நாளிதழ்களை எரித்தனர். இது எப்போதுமே மேல்சாதியினர் செய்யும் செயல்பாடு. அதை அப்படியே தீண்டத்தகாதவர்கள் திரும்ப செய்தனர். உடனே மேல்சாதியினர், சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி பேசத் தொடங்கினர்.




இதில் மாறுபட்ட கருத்துகளும் இல்லாமல் இல்லை. தீண்டத்தகாதவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் கல்வி, பணியை வழங்குவது அவர்களை இந்துக்களாகவே வைத்து அடிமையாக அடக்கியாள்வது என்ற கருத்தையும் சிந்தனையாளர்கள் முன்வைத்தனர்.




இட ஒதுக்கீடு கிடைக்கிறது அல்லது இல்லை. தலித்துகள் இந்துமதத்தில் இழுக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதே முக்கியம். தலித் நாட்டிற்காக தீண்டத்தகாதவர்கள் போராட வேண்டும். அவர்களுக்கு தனியாக ஒரு நாடு வேண்டும் என்பது தேவை. 1978ஆம் ஆண்டு, மேல்சாதியினர் தீண்டத்தகாதவர்களை மனித தன்மையற்ற முறையில் அடித்து உதைத்து சித்திரவதை செய்து எரித்து கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நாம் தனி நாடு பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.




தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியான சம்பவங்கள் ஆண்டுதோறும் கூடி வருவதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்து பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ், ஜனதா கட்சியை கட்டுப்படுத்திய ஆண்டது. எனவே, 1977ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர்கள், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்டியதற்காக தீண்டத்தகாதவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.




இந்தியாவின் கிராமங்களில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், தீண்டத்தகாதவர்களை தாக்குவதற்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தவறான முன்முடிவுகளைக் கொண்ட மேல்சாதியினர், வாய்ப்பு கிடைத்ததும் வெறிகொண்ட நாய்கள் போல பாய்ந்தனர். ம




மராத்வாடா படுகொலை என அழைக்கப்படும் அந்த குற்றச்சம்பவம் தீண்டத்தகாதவர்களுக்கு பெரும் உயிர், பொருள் சேதத்தை ஏற்படுத்தியது. அதுவரை அவர்களுக்கு நடந்த அநீதிகளை விட இந்த ஒற்றை சம்பவம் ஏற்படுத்தி பாதிப்பு அதிகம். தீண்டத்தகாவர்கள் மீது இதுவரை அப்படியொரு அநீதியான போர் நடைபெற்றதில்லை என்று கூறலாம்.




பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவது பிரச்னையல்ல. தீண்டத்தகாதவர்களுக்கு அரசியலமைப்பு வழியாக உரிமை, பாதுகாப்பு வழங்கப்படுவது இந்துக்களுக்கு வயிற்றெரிச்சலையும், பொறாமையையும் தூண்டியது. மராத்வாடா வன்முறை சம்பவம், அம்பேத்கர் முன்னர் கூறிய கருத்தை உறுதிப்படுத்தியது. சமூகத்தில் பெரும்பான்மை இனம் மக்களை ஆள்வது என்பது பார்ப்பனன் ஆள்வதுதான் என்று அவர் கூறியிருந்தார். மராத்வாடா படுகொலைக்கு பிறகு குஜராத் சாதிப் போர் நடைபெற்றது. இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் தீண்டத்தகாதவர்களுக்கு தினசரி நடப்பதுதான். இந்துகள் பசுக்கள் வெட்டப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறார்களே ஒழிய, மனிதர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பற்றி அல்ல.




அரசு, கொள்கை, நீதித்துறை, ஊடகம், ராணுவம் என அனைத்தையும் இந்துகள் கட்டுப்படுத்துகிறார்கள். எனவே, தீண்டத்தகாதவர்களுக்கு எதிரான வன்முறை பற்றிய செய்தி வெளியே வரும்போது, அவர்களை சார்ந்த அத்தனை பேரும் உதவிக்கு வந்துவிடுகிறார்கள். மராத்வாடா, குஜராத் சம்பவங்கள் எல்லாம் இதற்கான சான்று. ஒருங்கிணைந்த வன்முறையிலிருந்து தீண்டத்தகாத மக்களைக் காக்க நண்பர்களோ, சமூக ஆதரவோ கிடைப்பதில்லை. இவர்கள் மனிதர்களாக வாழவோ, சாகவோ அனுமதிக்கப்படுவதில்லை.




தீண்டத்தகாதவர்கள் முழுமையாக படுகொலை செய்யப்பட்டால் இந்துகளுக்கு இலவசமான அடிமை, வேலைக்காரர்கள் கிடைக்காமல் போய்விடுவார்கள். எனவே அவர்கள் வாழவும், சாகவும் முடியாமல் அலைகழிக்கப்படுகிறார்கள். ஏறத்தாழ உயிர் வாழும் பிணம்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!