புலிகளை பாதுகாக்க பாடுபட்ட வால்மிக் தாப்பர் - அஞ்சலிக் கட்டுரை

 


சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான வால்மிக் தாப்பர் காலமாகியுள்ளார். செரிமான உறுப்புகளில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். உலகில் காடுகளை பாதுகாக்கும் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவராக வால்மிக் தாப்பர் இருந்துள்ளார். இரண்டு டஜன் நூல்களை புலிகளைப் பற்றி எழுதியுள்ளார். பிபிசி வெளியீடான லேண்ட் ஆப் டைகர் (1997) என்ற ஆவணப்படம் இவரது ஆளுமையை உலகிற்கு வலுவாக சொன்னது.

வால்மிக் தாப்பர் கானுயிர்கள் பற்றி முறையாக கற்று அறிந்தவர் அல்ல ரந்தம்பூரில் உள்ள புலிகளைப் பார்த்து ஆய்வு செய்து ஐம்பது ஆண்டுகளாக அறிவை சேமித்து அதை உலகினரோடு பகிர்ந்து கொண்டார். 1987ஆம் ஆண்டு, ராந்தம்பூர் பவுண்டேஷன் என்ற தொண்டூழிய நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியாக காடுகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தஸ்ட்கர் என்ற மற்றொரு தொண்டூழிய நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். 2012ஆம் ஆண்டு டைகர் மை லைப், ராந்தம்பூர் அண்டு பியான்ட் என்ற நூலை எழுதினார். இரைச்சல் இல்லாத மனிதர்களிடமிருந்து தள்ளி தொலைவிலுள்ள இடங்களில் புலிகள் வாழ்கின்றன, வாழ விரும்புகின்றன என சுட்டிக்காட்டியிருப்பார். அவரது வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது.

தனது செயல்பாடுகளைப் பற்றி வெளிப்படையாக பேசும் போக்கைக் கொண்டிருந்தார் வால்மிக் தாப்பர். அரசின் பல்வேறு சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் உறுப்பினராக இயங்கினார். 2005ஆம் ஆண்டு ராஜஸ்தானில் புலிகள் அழிவு காரணமாக அமைக்கப்பட்ட புலிகள் பாதுகாப்பு படையிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அரசு அமைப்புகளின் செயல்பாட்டில் அவருக்கு நம்பிக்கையில்லை. வேட்டைக்கார ர்களின் தோட்டாக்கள் கொன்றதை விட அதிகாரிகள் கொன்ற புலிகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறினார். புலிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட நிதியை அவரது ராந்தம்பூர் பவுண்டேஷன் தொண்டூழிய அமைப்பு பெற்றபோது, அதை விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரை வெளியானது. அதுவரை நண்பராக இருந்த கட்டுரை எழுதிய பத்திரிகையாளரை பிறகு அவர் தொடர்புகொள்ளவில்லை.

புராஜெக்ட் டைகர் திட்டத்தின் தலைவரான ராஜேஷ் கோபாலை அதிகம் தாக்கி எழுதியது வால்மிக் தாப்பராகவே இருக்கும். தனது வாழ்க்கையின் இறுதி நாள் வரை புலிகளின் நலனுக்காக உழைத்தவர், வால்மிக் தாப்பர். காட்டிலுள்ள புலிகளை காப்பது மட்டும் என்று யோசிக்காமல், அதை சார்ந்த பொருளாதாரத்தை மீட்டு புதிதாக கட்டமைக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக இருந்தார். அது இந்திய பத்திரிகையாளர்களுக்கு புரியவில்லை. அரசு அமைப்புகளுக்கு புரிந்திருந்தால் புலிகளின் எண்ணிக்கை குறைந்திருக்காது.

தான் கொண்ட கருத்தில் பிடிவாதம் கொண்ட செயல்பாட்டாளராக வாழ்ந்த வால்மிக் தாப்பர், புலிகளை தன்னை விட அதிகமாக நேசித்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!