இடுகைகள்

ஸ்லோவேனியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாக்கப்பட்ட பசுமை தேசம்!

படம்
பசுமை தேசம்! ஸ்லோவேனியா சிறிய நாடுதான். ஆனால் அங்குள்ள பசுமை சட்டங்களால் 53.6 சதவிகித வனப்பரப்புகள் அரசினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனோடு ஒப்பிட்டால் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் வனப்பரப்பின் அளவு 13 சதவிகிதம்தான். இங்குள்ள கம்னிக்-சாவிஞ்சா ஆல்ப்ஸ் பசுமையை பார்த்தால் சொர்க்கத்திற்கே வந்தது போல உணர்வீர்கள். ஐரோப்பிய நாடுகளிலேயே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி கொண்ட நாடு ஸ்லோவேனியா மட்டுமே. உலகளவில் வெனிசுலாவுக்கு அடுத்த இடத்தை இந்நாடு பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தை விட சிறிய நாடான ஸ்லோவேனியாவில் 60 சதவிகிதம் வனப்பரப்புகள்தான். 40 தேசியப்பூங்காக்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.”1892 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வனம் அமைக்கப்பட்டு, 1920 ஆண்டு வனப்பாதுகாப்பு திட்டங்கள் அமுலுக்கு வந்தன. இயற்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு எங்களுக்குண்டு” என்கிறார் சூழல் அமைச்சர் பீட்டர் ஸ்கோபெர்ன். ஆண்டுதோறும் இந்நாட்டிற்கு 40 லட்சம் டூரிஸ்டுகள் வருகின்றனர். உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்கு 9%. வே