இடுகைகள்

ஜேஎன்யு பல்கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரு பல்கலையில் உயர்த்தப்பட்ட கட்டணம்!- என்ன பிரச்னை?

படம்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் இன்றைய பெரும்பான்மையான முக்கிய தலைவர்கள், இயக்குநர்கள் என இருக்கிறார்கள். காரணம், அங்கு பாடங்களைத் தாண்டி சொல்லித்தரப்படும். தற்போது அங்குள்ள விடுதி வாடகை ஏற்றப்பட்டு உள்ளது.  தெரிஞ்சுக்கோ! டில்லி நேரு பல்கலையில் பயிலும் மாணவர்களின் 40 சதவீத குடும்பங்களின் மாத வருமானம் 12 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் உள்ளது என்கிறது அவர்களின் மாணவர் சங்கம். விடுதியில் உயர்த்தப்பட்ட தொகை 1700. இதனால் வாடகைத் தொகை 2 ஆயிரம் முதல் 2500 வரை அதிகரித்திருக்கிறது. திருப்பித்தரும் காப்புத்தொகை 5500 முதல் 12000 வரை அதிகரித்துள்ளது. மாதம் ரூ.20 என்று இருந்த மாணவர்களின் அறை வாடகை ரூ.600 ஆக மாறி உள்ளது. இரண்டு அறைகள் வாடகை ரூ.10லிருந்து 300 ரூபாயாக மாறியுள்ளது. மாணவர் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் 50 ஆயிரம் முதல் அறுபதாயிரம் வரை எகிறியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை 27,600 முதல் 30 ஆயிரம் வரை. இதனால் அதிக விலை வசூலிக்கும் பல்கலைக்கழகமாக தற்போது பெயர் வாங்கியுள்ளது. 19 ஆண்டுகளாக பல்கலையின் விடுதி, மெஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பல்கல