இடுகைகள்

சோப்ராஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம் - சோப்ராஜின் முடிவு என்ன?

படம்
சோப்ராஜ் எனும் பாம்பு! சார்லஸ் சோப்ராஜூக்கு பாம்பு என்ற பெயரும் உண்டு. என்ன காரணம், குற்றம் செய்த இடம் ஆகட்டும் பிற இடங்கள் ஆகட்டும் அப்படியே நீரில் நழுவுவது போல செல்வதுதான் சாரின் சிறப்பம்சம். 1976 ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, சோப்ராஜ் பத்து கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு இந்தியாவில் அவர் சிறை தண்டனை முடிவுக்கு வந்தது. தாய்லாந்தில் சோப்ராஜூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அங்கே செல்ல சோப்ராஜூக்கு பைத்தியமா என்ன? சிறையில் அமைதியாக வாழ்நாளை கழித்தவருக்கு பெருமை சேர்க்க அவரது கூட்டாளிகள் முடிவு செய்தனர். பின்னே சோற்றுக்கு இல்லாமல் சிறைக்க வந்தவரா சோப்ராஜ்? அதனால், ஜாலியாக பார்ட்டி கொண்டாட முடிவு செய்தனர். பத்தாண்டு சிறை வாழ்க்கை, வாழும் வள்ளுவர், மக்களின் மனசாட்சி என கோரஸ் பாடி சரக்குடன் கொண்டாடினர். சிறையில் அதெப்படி கிடைக்கும் என பச்சைப் புள்ளையாக கேட்டால் உலகத்தை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். மனிதர்கள் வாழும் நகரில் உன்னதங்களோடு ஊசல்தனங்களும் நடப்பதில்லையா? மனிதர்கள் எங்கு வசித்தாலும் அங்கு அவர்களின் கு