இடுகைகள்

ஜேனட் டெய்லர் ஸ்பென்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போட்டிபோடும் பெண்களின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

படம்
  போட்டி போடும் பெண்கள்  நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க 33 சதவீதம் என சட்டமியற்ற வேண்டியிருக்கிறது. இதைக்கூட தேர்தலுக்கான கண்துடைப்பாகவே அரசியல் கட்சிகள் செய்கின்றன. உண்மையில் திறமையான பெண்களை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறதா? புராணங்களைக் கூறி, உடலின் வரம்புகளை சுட்டிக்காட்டி முடக்குகிறதா? இதைப்பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் பெண்கள் வீட்டு வேலைக்கென அடிமைபோல நடத்தப்பட்டதுதான். அவர்களை மனிதர்களாக பார்த்து கௌரவித்து நடத்தியவர்கள் குறைவான ஆட்களே.  உலகளவிலும் திறமையான பெண்களை தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுத்து அவர்களின் குணநலன்களை தவறாக பிரசாரம் காட்டி தரம் தாழ்ந்த வகையில் வீழ்த்துகிறார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பு, செய்த சாதனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.  மேற்குலகில் பெண்களுக்கான உரிமைகளை கேட்டு போராடும் அமைப்புகள் எழுபதுகளில் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது ஆராய்ச்சியாளர் ஜேனட் டெய்லர் ஸ்பென்ஸ் என்பவர், பெண்களைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தார். அவரின் சகாக்கள் ஆண்களின் திறமை அதை சமூகம் அங்கீகரிக்கும் விதம் பற்றி ஆய்வு செய்தனர். இதைக் கேள்விப்பட்டவர்