போட்டிபோடும் பெண்களின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்!

 









போட்டி போடும் பெண்கள் 


நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க 33 சதவீதம் என சட்டமியற்ற வேண்டியிருக்கிறது. இதைக்கூட தேர்தலுக்கான கண்துடைப்பாகவே அரசியல் கட்சிகள் செய்கின்றன. உண்மையில் திறமையான பெண்களை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறதா? புராணங்களைக் கூறி, உடலின் வரம்புகளை சுட்டிக்காட்டி முடக்குகிறதா? இதைப்பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம் பெண்கள் வீட்டு வேலைக்கென அடிமைபோல நடத்தப்பட்டதுதான். அவர்களை மனிதர்களாக பார்த்து கௌரவித்து நடத்தியவர்கள் குறைவான ஆட்களே.  உலகளவிலும் திறமையான பெண்களை தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுத்து அவர்களின் குணநலன்களை தவறாக பிரசாரம் காட்டி தரம் தாழ்ந்த வகையில் வீழ்த்துகிறார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பு, செய்த சாதனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. 


மேற்குலகில் பெண்களுக்கான உரிமைகளை கேட்டு போராடும் அமைப்புகள் எழுபதுகளில் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது ஆராய்ச்சியாளர் ஜேனட் டெய்லர் ஸ்பென்ஸ் என்பவர், பெண்களைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தார். அவரின் சகாக்கள் ஆண்களின் திறமை அதை சமூகம் அங்கீகரிக்கும் விதம் பற்றி ஆய்வு செய்தனர். இதைக் கேள்விப்பட்டவர், ஏன் அவர்கள் பெண்களை ஆய்வுப்பொருளாக எடுக்கவில்லை என யோசித்தார். இந்த அடிப்படையில் ஆய்வு செய்து 'வூ லைக்ஸ் கம்பீடன்ட் வுமன்' என்ற ஆய்வறிக்கையை 1972 ஆம் ஆண்டு வெளியிட்டார். 


ஜேனட், ராபர்ட் ஹெல்ம்ரிட்ச் என்ற இன்னொரு ஆய்வாளரோடு சேர்ந்து ஆண், பெண் என இருவரும் பல்வேறு திறமைகள் கொண்ட பெண்களை திறமை அடிப்படையில் ஏற்கிறார்களா அல்லது பாலினத்தின் அடிப்படையில் அணுகுகிறார்களா என்று ஆய்வு செய்தார். இதைப்பற்றி அறிய கல்வி, திருமணம், தொழில் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், அறிவுசார்ந்த தலைமைத்திறன்,சமூக மற்றும் பொருளாதார சுதந்திரம் பற்றிய கேள்விகளை தயாரித்து அதை பங்கேற்பாளர்களிடம் கேட்டனர். பல்வேறு திறமைகளைக் கொண்ட பெண்களை விட திறமைகள் குறைவாக உள்ளவர்களையே பலரும் தேர்ந்தெடுத்திருந்தனர். உடல் அளவில் வலிமையான பெண்களுக்கு அதிகளவு மதிப்பெண்களை பங்கேற்பாளர்கள் வழங்கினர் என்பதே இதில் நகைமுரணான சங்கதி. 


ஜேனட்டின் ஆய்வு காரணமாக, சமூக உளவியலில் பாலினம் சார்ந்த ஆராய்ச்சி உப பிரிவாக மாறியது. அதுதான் ஆய்வில் முக்கியமான அம்சம். 

https://www.apa.org/about/governance/president/bio-janet-spence

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்