கூலிக்கொலைகாரன் தொன்மைக் காலத்திற்கு நகர்ந்து போர்வெறி கொண்ட வீரனாகும் கதை!

 











டேங் யின் 


மாங்கா காமிக்ஸ் 


250 அத்தியாயங்கள்-----



நகரத்தில் வாழும் கூலிக்கொலைகாரன். பாரில் உள்ள பெண்ணை ஒரு ரவுடிக்கூட்டம் போதைக்குள்ளாக்கி வல்லுறவு செய்ய முயல்கிறது. நாயகன் அதை தடுத்து அத்தனை பேர்களையும் கொல்கிறான். பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். பிறகு தனது அறைக்கு திரும்புகிறான். தூங்குபவனின் ஆன்மா தொன்மைக்காலத்திற்கு பயணிக்கிறது. 


ஒரு காட்டில் இலையை கட்டிக்கொண்டு நிற்பதை உணர்கிறான். உண்மையா என்று பார்த்தால் உண்மைதான். அங்கே உள்ள விலங்கு ஒன்றிடமிருந்து சண்டை போட்டு சற்றுவெளியே சென்று பார்த்தால் அங்கு நிங், விண்ட் என்ற இரு நாட்டு ராணுவத்துக்கு இடையில் போர் நடக்கிறது. டேங் யின் என்பது நாயகன் பெயர். கதையில் திடீரென டோமின் மாறுகிறது. நாம் டோமின் என்றே கொள்வோம். நிங் பலம் பொருந்தியவர்கள். விண்ட் பலவீனமானவர்கள். அவர்கள் புறம் நின்று டோமின் நான்கு எதிரிப்படை வீரர்களைக் கொல்கிறான். எதிரிப்படையினர் இறந்துபோன விண்ட் வீரர்களின் பிணங்களை நெருப்பு வைத்து கொழுத்துகிறார்கள். டோமின் நெருப்புக்கு பயந்து குகையில் பதுங்குகிறான். அங்குள்ள டார்க் ஆர்ட்ஸ் மாவீரனின் ஆவி, டோமினுக்குள் புகுகிறது.  உடனே அவன் உடலில் இருந்த காயங்கள் உடனே ஆறுகிறது. டார்க் ஆர்ட்ஸ் பயன்படுத்தி எதிரிகளை கொன்று அவர்களது ஆன்ம ஆற்றலை உட்கிரகிக்கிறான். அப்போது அவனுக்கு அங்கே வி்ண்ட் படையில் க்யூசென் என்ற ராஜதந்திரி பழக்கமாகிறான். இவன்தான் டோமினுக்கு பின்னாளில் மந்திரியாகி ராணுவ திட்டங்களை உருவாக்கித் தருகிறான். 


பலவீனமாக உள்ள உயிருக்கு போராடும் வீரர்களை டோமின், தனது சக்தி மூலம் காப்பாற்றுகிறான். எனவே அவனே அவர்களுக்கு தலைவராக மாறுகிறான். அதாவது கேப்டன். மந்திரி க்யூதான் அப்படி அவனை அழைக்குமாறு வீரர்களிடம் கூறுகிறான். அவர்கள் அனைவரும் அங்கிருந்து விலகி டாங்க்மன் என்ற நகரத்திற்கு போகவேண்டும். போரில் மிச்சமுள்ளவர்கள் இருநூறு பேர். குதிரைகள் இல்லாமல் நடந்துபோனால் பலரது உயிர் அங்கேயே போய்விடும் நிலை. எனவே, நிங் படையின் தளபதி ஒருவரை டோமின் எதிர்த்து சண்டையிட்டு வீழ்த்துகிறான். அந்த தைரியத்தில் விண்ட் படை, எதிரிகளை அடித்து நொறுக்குகிறது. குதிரைகளை கைப்பற்றுகிறது. அந்த வெற்றியுடன் அவர்கள் ஓய்வெடுக்க நினைக்கும்போது, டோமின் சொல்கிறான். ஒரு கி.மீ தூரத்திற்குள் எதிரி இருக்கிறார்களா என்று பார்த்து வா என ஒருவனை அனுப்புகிறான். அங்கு ஒரு படை வருகிறது. அது, விண்ட் ஆதரவுப்படை. அவர்களை சந்தித்தால் கூட டோமின் அவர்களை வணங்க மறுக்கிறான். ஜெனரல் வெய் யூ என்ற பெண்ணும் அவளது சகோதரியும் அங்கு வருகிறார்கள். நிங் படைத்தளபதியை டோமின் வீழ்த்தியதை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். வெய் யூ அவனை தனது தலைமையின் கீழ் வைத்துக்கொள்கிறாள். இப்படித்தான் இந்த கதை வேகம் பிடிக்கிறது. 


ஒரு ராஜா, அவருக்கு அணுக்கமாக உதவி செய்யும் விதமாக நான்கு பெரிய குடும்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் வெய் யூ குடும்பம். அவர்களுக்குள்ளாக நிறைய பூசல்கள் உள்ளன. துரோகங்கள்,சதிகள் என நிறைய நடைபெறுகின்றன. இதை கேப்டன் டோமின் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றான் என்பதே காமிக்ஸ் கதை. 


இந்த காமிக்ஸ் முழுக்க போர்க்களத்தில் நடைபெறுகிறது. ஆவேசமான போர்க்கள காட்சிகள், அங்கு நடக்கும் போர் உத்திகள், கோட்டைத் தாக்குதல், தற்காப்புக் கலை தாக்குதல்கள், பார்பேரியன் எனும் முரட்டு மனிதர்களின் தாக்குதல், அடுத்து நிங் எனும் அண்டை நாட்டு தாக்குதல், நான்கு குடும்பங்களுக்குள் நடைபெறும் அதிகார பிரச்னை என கதை நகர்கிறது. 


டோமினைப் பொறுத்தவரை அவன் உடலுக்குள் உள்ள ஆவி சொன்னதைக்கேட்டு நடக்கிறான். அது பாதிக்கதை வரைதான். ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதால், பழிவாங்க எதிரிகள் இல்லை. எனவே பழிவாங்குவதை ஒத்திவைத்துவிட்டு ராணுவத்தில் தனது பதவிக்கேற்ற வேலையை பார்க்கத் தொடங்குவான். தன்னை பிறர் தலைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு நடந்துகொள்வான். கூடவே அவனது பெருமையை வெளியுலகிற்கு சொல்வதற்கு மந்திரி க்யூ உதவுவான். மந்திரிக்கு எது பெருமை? அவன் சார்ந்த அரசன் வெற்றி பெறுவதுதானே? எனவே மந்திரி க்யூ, டோமினுக்கு ராணுவ தாக்குதல் திட்டங்களை உருவாக்கித் தருவான். அவனது வெற்றி மூலம் மந்திரியும் உயர்வான். க்யூ வெறும் நண்பன் மட்டுமல்ல. மந்திரி,ஆலோசகன், நெருக்கமான உறவும் கூட. 


பெய்சாவைச் சேர்ந்த பார்பேரியன்களோடு மோதும் போர்க்கள காட்சிகள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. டோமின் தனக்கான ராணுவத்தை கட்டமைப்பதோடு, அவர்களுக்கான செலவுகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பான். அதேசமயம், நேர்மையாக நகரம் இயங்குகிறதா, ரவுடிகள் வியாபாரத்தை கெடுக்கிறார்களா என்று பார்த்து அதை சீர்செய்வான். டோமினைப் பொறுத்தவரை காதல், பெண் எல்லாம் ஆடம்பரம் என்று நினைப்பவன். கொல்லவேண்டுமா, அது எளிமை. காதலா அது கடினம் என நேரடியாகவே வெய் யூவிடம் சொல்லுகிறான். அதேசமயம் ஃபேன் எனும் வியாபார குழுமத்தின் பெண். டோமினை விரும்பத் தொடங்குவாள். அவளுடன் டோமின் உடலுறவு கூட கொள்வான். அவன் மனநிலை, இந்த விஷயம் ஆடம்பரம். ஆனால் கிடைக்கிறது. அனுபவிப்போம் என்பதாகவே இருக்கும். மற்றபடி, திறமையான போர் வீரர்களை எப்படி தன்பக்கம் இழுப்பது என்பதாகவே அவனது சிந்தனை இருக்கும். 


போர், அதன் ராஜதந்திரங்கள், தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கான காமிக்ஸ்.


கோமாளிமேடை டீம்  




கருத்துகள்