இடுகைகள்

கண்ணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரம்பரிய பயிர்களை நடவு செய்யும் விவசாயி!

படம்
  சிவகங்கையில் வாழும் விவசாயியான கண்ணன், அங்குள்ள விவசாயிகளுக்காக அறுவடைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் நோக்கமே, பாரம்பரிய நெற்பயிர்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான்.  பொறியாளராக பணியாற்றி வந்த கண்ணன் எப்போது விவசாயி ஆனார், அவர் நடவு குறித்த ஏராளமான விஷயங்களை சொல்வார் என யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று சூழல் அப்படித்தான் இருக்கிறது. விவசாயம் பற்றி நுட்ப நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொண்டதே ஜனவரி 2018லிருந்துதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.  சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், 9 டூ 6 மணி வேலையை விட்டு வருவார் என யாருக்கு தெரியும்? கண்ணனுக்கே சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார். கண்ணனின் அப்பா காலமானபிறகு, அவரின் தந்தையும் தாத்தாவுமான அழகுகோனார்  கண்ணன் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படி சென்னையில் செய்து வந்த வேலையைவிட்டு விட்டு அம்மா இந்திரா, தம்பி பாலசுப்பிரமணியத்துடன் கிராமத்திற்கு வந்துவிட்டார் கண்ணன்.  கட்டுமான இயந்திரங்களை இயக்கி பழகியவர் கண்ணன். ஆனால் விவசாய விஷயங்களை