இடுகைகள்

கட்டுரை விமர்சன்ம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டைவிரலுக்கு தெம்பு தரும் ஆன்மாவின் குருதி!

படம்
தீராந்தி மேமாத இதழில் இந்திரன் புதிதாக தொடங்கியுள்ள எழுத்தை வாழ்தல் தொடர் அட்டகாசமான தொடக்க உரையோடு தொடங்கியுள்ளது. எழுத்தாளனாக வாழ்வது வேறு, இந்தியாவில் எழுத்தாளனாக இருப்பது வேறு என வகைப்படுத்துவதில் எழுத்தாளனின் மனவலியை பதிவு செய்வதிலிருந்து கமலாதாஸ், சல்மான் ருஷ்டி, ரேமண்ட் கார்வர் ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை அற்புதமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் இந்திரன். அதேசமயம் தன் சுயத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளர்களின் நம்பிக்கையையும் வெ. சாமிநாத சர்மாவின் சொற்கள் வழியாக கூறுவது அருமை. ஆன்ம ஒளி வீசும் வார்த்தைகள் அவை. வாழ்வின் இயல்பாக சோகம் இருக்கும்போது தனியாக எழுத்தாளர்களின் வாழ்க்கை சோகம் என கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. தன்னை வெளிப்படுத்துதல் என்பதை எழுத்தாளர் முக்கியமான லட்சியமாக கருதும்போது பாதை குறித்து புலம்பவோ புகார் செய்யவோ என்ன இருக்கிறது? கதாபாத்திரங்கள் தரும் மன அயர்ச்சி பற்றிய இந்திரனின் விளக்கங்கள் அருமை. எழுத்தை வாழ்தல் தொடர் சிறக்க வாழ்த்துகிறேன். -கோமாளிமேடை டீம்