சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம்!
நாட்டில் எந்த சீர்திருத்தங்கள் வந்தாலும் அதற்கு கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவசியம். பல்வேறு தரப்பு, கொள்கைகளை விவாதித்தால்தான் பல்வேறுவிதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதுவே, நேர்மறை, எதிர்மறையான விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அதை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சீனாவில் கல்வி சீர்திருத்தங்கள் வேகம் பெற்றது தொண்ணூறுகளுக்கு பிறகுதான். சீனா போன்ற தொன்மை பெருமை கொண்ட நாட்டில், அதன் கடந்த காலமே சீர்திருத்தங்களுக்கு எதிராக மாறுவது புதிதான ஒன்றல்ல. சீனாவில், 1990ஆம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கல்வி புத்துயிர்ப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு, அடிப்படை கல்வித்திட்ட சீர்திருத்தம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டு சீனாவின் கல்வித் திட்டங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் மேம்பாடுகள் இருந்தன என்பது உண்மை என்றாலும் மத்திய அரசின் மேலாதிக்கம் கூடுதலாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அதிபர் ஷி ச்சின் பிங்கின் கருத்துகள் அடிப்படையில் நாட்டுப்பற்று தொடர்பான கருத்துகள், பாடங்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவை முழுக்க மாணவர்கள...