இடுகைகள்

இளைஞர்கள் தற்கொலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்கள் தற்கொலை!- அதிகரிக்க காரணம் என்ன?

தனிமை..தற்கொலை..   தவிக்கும் புதிய தலைமுறை- எக்கச்சக்க எதிர்பார்ப்புகள், சவாலான போட்டி, வேலைவாய்ப்பு இழுபறி தகுதிகள், சமூகவலைதள கிண்டல்கள், தொழில்நுட்ப தனிமை என புதிய தலைமுறையினர் இதுவரை சந்திக்காத மன அழுத்த சூழல்களை சந்தித்து வருகின்றனர். புறக்கணிப்பு, தோல்விகளை இயல்பாக ஏற்க முடியாமல் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய பெருநகரங்களில் 1,400 மாணவர்களுக்கிடையே நடந்த ஆய்வில் 47% மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளதும், 59% பேர் தற்கொலை எண்ணம் மனதில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். என்ன காரணம்? பொருளாதார வேகத்தில் இளைஞர்களின் பிரச்னைகளை அவர்களின் பெற்றோர் உட்பட யாரும் காதுகொடுத்து கேட்காததுதான். “இளைஞர்கள் காதல் தோல்வி, எதிர்பார்த்த வேலை கிடைக்காதது ஆகியவற்றை வாழ்வின் இயல்பாக எடுத்துக்கொள்ள பழகாததுதான் சிக்கல். தகவல்தொழில்நுட்பம் அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதும் முக்கியக்காரணம்” என்கிறார் உளவியலாளரான மம்தா ஹரிஷ். உலகெங்கும் 15-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் இறப்புக