இடுகைகள்

இருபக்க கட்டுரை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ட்விட்டர் ராஜாங்கம்!

படம்
ட்விட்டர் எனும் நீதிமணி! தேர்தலில் ஜெயிக்கும்வரை மண்ணில் பார்த்த வேட்பாளர்கள், வெற்றிக்குப் பிறகு கார் அணிவகுப்பிலும் ஹெலிகாப்டரில்தான் தொகுதிக்கு விஜயம் செய்வார்கள். குறைகளை கேட்பதும் அப்படித்தான். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இந்திய பிரதமர் மோடி வரை அனைவரும் சமூகவலைதளங்களையே அதிகாரப்பூர்வ ஊடகமாக்கி நீதிபரிபாலனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்களான வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தெலுங்கானாவின் ஐ.டி அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் ட்விட்டர்களிலேயே மக்களின் குறைகளை தீர்த்து பிரபலமாகி வருகின்றனர். படிப்பு, ஆபரேஷன், சாலை, குடிநீர் என அத்தனை புகார்களையும் ஏற்று தெலுங்கானாவின் ஐ.டி அமைச்சர் ராமாராவ்(கே.டி.ஆர்) ட்விட்டரிலேயே தீர்வு தருகிறார். தனது ட்விட்டர் கணக்கில் “உங்கள் குறைகளை எனக்கு தெரியப்படுத்தினால் அதனை உரிய அமைச்சகத்துக்கு அனுப்புகிறேன்” என்று கொடுத்துள்ள வாக்குறுதி பொய்யல்ல. இவருக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் உதவிகோரி ட்விட் மனுக்களை அனுப்புவது தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில்தான்.   ட்வ