சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!
மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது. இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...