இடுகைகள்

பிடித்த கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்குப்பிடித்த சிறுகதை

எனக்குப்பிடித்த சிறுகதை ஆத்ம ருசி                        சுகா வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெருமுனையிலுள்ள கோயில்வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள் கடை, நயினார் குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து தொளதொளவென வெள்ளைக் கதர்ச்சட்டையும், நாலுமுழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாக கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்கவரும்போது, மதியப்பொழுதில் சிறிதுநேரம் கட்டையைச் சாய்க்கும்போதுதான் என அபூர்வமான தருணங்களில்தான் அந்த துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்டவெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள்தாடி நிரந்தரமாக கந்தையா பெரியப்பாவின் முகத்தில் உண்டு. எல்லோருமே அவரை பெரியப்பா என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார்கோயில்  தெருவில் ஒரு பழைய சுண்ண