இடுகைகள்

குழு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்

மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாக திரண்டால் மட்டுமே அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும்!

படம்
                  ராமசுவாமி   ஈக்குவலி ஸ்டோரிஸ் பை பிரண்ட்ஸ் ஆப் தி க்யுர் வேர்ல்டு என்ற பெயரில் நூல் வெளியாகியுள்ளது . இதனை ஶ்ரீனி ராமசுவாமி , ராமகிருஷ்ண சின்கா ஆகியோர் இணை ஆசிரியர்களாக பணியாற்றி தொகுத்துள்ளனர் . இதில் 45 பேரின் கதைகள் உள்ளன . நூலைப்பற்றி அவர்களிடம் பேசினோம் . கூட்டணி என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் இ்ங்கு வாழ முடியும் . இதைத்தான் நாங்கள் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளோம் . ஒருவர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து பிறரை புரிந்துகொள்ள முடியும் . இதற்கு அவர்கள் ஒன்றாக இணைவது முக்கியமானது . நீங்கள் வெளியே வருவது பற்றி கூறுகிறீர்கள் . அதைப்பற்றி விளக்குங்களேன் . வெளியே வருவது என்று நான் கூறியது , தங்களது விருப்பம் பற்றி மாற்றுப் பாலினத்தவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதுதான் . பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நிறுவனங்கள் என அனைவரும் மாற்றுப்பாலினத்தவரின் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்க கூடியவர்கள் . இவர்கள் அனைவருமே ஒரு கூட்டணியாக திரண்டால் தங்களுக்கான கோரிக்கைகளை எளி

குழுவாக பழக்கங்களை கையாண்டு வெற்றி பெறுவது எப்படி? - பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி மந்திரங்கள்

படம்
                  குழுவாக வெற்றி பெறுவது எப்படி ? குழுவின் தலைவராக இருப்பவரின் பல்வேறு விதிகள் அந்த குழுவினரின் மீது தாக்கம் ஏற்படுத்தும் . குறிப்பிட்ட நேர வரையறையில் வேலைகளை முடித்தல் , எதற்கு முன்னுரிமை கொடுப்பது . அலுவலக கலாசாரம் , காதலை அனுமதிப்பது என இதில் நிறைய விவகாரங்கள் உள்ளன . அடிப்படையில் பழக்கங்கள் என்பது தனிநபரிலிருந்துதான் தொடங்குகிறது . அப்பழக்கம் அவருக்கு வெற்றியைத் தந்தால் அது பிறருக்கு அப்படியே காப்பிகேட் செய்யப்படுகிறது . இதில் என்ன தவறு இருக்கிறது ? வெற்றி பெற்ற பார்முலாதானே ? பல்வேறு நிறுவனங்களிலுள்ள குழுக்கள் சிறப்பான பழக்கங்களை கடைபிடிப்பதால்தான் வெற்றி பெற்று நிறுவனத்தையும் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன . சிறிய பழக்கங்களாக இருந்தாலும் கூட பெரிய மாற்றங்களை இவை ஏற்படுத்துகின்றன . வணிக உலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேலை செய்வதைப் பொறுத்தவரை சில கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன . பல்வேறு கொள்கைகள் , நோக்கங்கள் , துறைகள் என்றாலும் பழக்கங்கள்தான் நிறுவனங்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன . வணிக வட்டாரங்களில் தோல்வியை நேர்மறையாகவே ஏற்று

பகிர்ந்து வாழ்வதே மில்லியனிய லட்சியம்!

படம்
பகிர்ந்து வாழ்வோம் - தப்பே இல்லை! நீங்கள் சொந்தமாக வீடு வைத்திருந்தால் பெருமையாக இருக்கும். ஆனால் அதற்கான பராமரிப்பு என்ற விஷயம் வரும்போதுதான் செலவு தேள் கடித்தாற்போல கடுகடுக்கும். மாருதி காரே வைத்திருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையேனும் அதனை ஓட்டிப் பார்ப்பது, சர்வீஸ் செய்வது என செலவுகள் இழுக்கும். இப்போது இப்படி யோசியுங்கள். சென்னையில் கட்டி வைத்த வீடுகளில் ஒன்றை வாடகை அல்லது லீசுக்கு பேசி வாடகைக்கு பர்னிச்சர்களை தரும் ஸ்டார்ட்அப்களில் பணம் கட்டி பொருட்களை வாங்கினால் எந்த பிரச்னையும் கிடையாது. அவர்களே கொண்டு வந்து கொடுத்துவிட்டு பின்னர் எடுத்துக்கொண்டும் சென்றுவிடுவார்கள். மேலும் இதற்கு நமக்கு தேவைப்படுவது தேய்மானச்செலவு மட்டுமே. இன்று வேலை காரணமாக அங்குமிங்கும் ஏரியாவாரியாக அலையும்போது நாம் வாங்கி குவிக்கும் பொருட்கள் பெரும் சுமை. 1980 களில் ஒருவரிடம் என்ன இருக்கும்? நிலம், வீடு, தங்கம், கால்நடை என இருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் லேப்டாப், ஹெட்போன், உடைந்த திரை கொண்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள். எங்கேனும் செல்வதற்கு சைக்கிளில் செல்வார்கள். வாழ்க்கை சுமை க