குழுவாக பழக்கங்களை கையாண்டு வெற்றி பெறுவது எப்படி? - பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி மந்திரங்கள்

 

 

 

 

 

 

 


 

 

குழுவாக வெற்றி பெறுவது எப்படி?


குழுவின் தலைவராக இருப்பவரின் பல்வேறு விதிகள் அந்த குழுவினரின் மீது தாக்கம் ஏற்படுத்தும். குறிப்பிட்ட நேர வரையறையில் வேலைகளை முடித்தல், எதற்கு முன்னுரிமை கொடுப்பது. அலுவலக கலாசாரம், காதலை அனுமதிப்பது என இதில் நிறைய விவகாரங்கள் உள்ளன. அடிப்படையில் பழக்கங்கள் என்பது தனிநபரிலிருந்துதான் தொடங்குகிறது. அப்பழக்கம் அவருக்கு வெற்றியைத் தந்தால் அது பிறருக்கு அப்படியே காப்பிகேட் செய்யப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? வெற்றி பெற்ற பார்முலாதானே? பல்வேறு நிறுவனங்களிலுள்ள குழுக்கள் சிறப்பான பழக்கங்களை கடைபிடிப்பதால்தான் வெற்றி பெற்று நிறுவனத்தையும் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன.


சிறிய பழக்கங்களாக இருந்தாலும் கூட பெரிய மாற்றங்களை இவை ஏற்படுத்துகின்றன. வணிக உலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேலை செய்வதைப் பொறுத்தவரை சில கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன. பல்வேறு கொள்கைகள், நோக்கங்கள், துறைகள் என்றாலும் பழக்கங்கள்தான் நிறுவனங்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. வணிக வட்டாரங்களில் தோல்வியை நேர்மறையாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். விரைவில் தோல்வியை அடை என்று கூட வாசகம் உண்டு. இதனை அனைத்து துறைகளுக்கும் ஏற்றது என்று கூறமுடியாது. வங்கித்துறையில் தவறுகளை ஒருவர் செய்தால் அதற்கு கொடுக்கவேண்டிய விலை அதிகம். தொழில்முனைவோர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் இந்த முறையைக் கற்றுக்கொண்டு வெற்றி பெறலாம். நிறுவனத்தை வலுவாக்கலாம்.


கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் டைசன் ரோஸ், ட்யூல் சைக்ளோன் வேக்குவம் க்ளீனர், ஹேர் ட்ரையர், மின்விசிறி, ஹீட்டர் ப்யூரிபையர் ஆகிவற்றை கண்டுபிடித்து சாதனை செய்தார். இதற்கு அவர் பதினைந்து ஆண்டுகள் உழைத்திருக்கிறார். அத்தனை ஆண்டுகளும் எந்திரங்களை சரியானபடி வடிவமைக்க முயன்று வந்தார். வெற்றியிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதுமில்லை. தோல்வியிலிருந்து நிறைய கற்று்க்கொள்ளலாம் என்கிறார். நவீன தொழிலதிபர்களில் இதற்கு சரியான எடுத்துக்காட்டு எலன் மஸ்க்தான். இவரது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவும்போது நிறைய முறை வெடித்திருக்கிறது. டெஸ்லா காரின் பேட்டரிகளும் கூட சொதப்பியுள்ளன. ஆனாலும் கூட தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட எலன் இன்று சொத்துமதிப்பில் உயர்ந்து நிற்பதோடு தடுமாறிய நிறுவனங்களையும் தோளில் சுமந்து வெற்றி பெற வைத்திருக்கிறார். தொடர்ந்து பணியில் ஈடுபடும்போதுதான் செயல்பாடு மேம்படும் என்பதை தனது செயல்மூலம் பிறருக்கும் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.


நீங்கள் தேடும் பதில் கிடைக்காதபோது அதனைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான தொழில்முனைவோர் இந்த இடத்தில்தான் விட்டுக்கொடுத்து விடுகிறார்கள் என்றார் ஜேம்ஸ் டைசன். ஆப்பிளின் முன்னாள் இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றி நாம் பேசாமல் இருக்கமுடியாது. அவரைப் பொறுத்தவரை நேர்த்தியும் எளிமையும் முக்கியம் என நினைத்தார். தனது தடுமாற்றங்கள், தவறுகளை கூட அவர் பேசாமல் இருந்திருக்கிறார். ஆனால் பிறர் செய்யும் தவறுகளை எப்போதுமே பொறுத்துக்கொண்டதில்லை. ஆனால் விளைவுகள் அற்புதமானவை. இன்று ஆப்பிள் என்ற நிறுவனத்திற்கு இருக்கும் மதிப்பும், அந்தஸ்தும். கௌரவமும் அவர் உருவாக்கியதுதான்.


1985ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். பிக்சார் எனும் அனிமேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதில் அனைத்திலுமே கொஞ்சம் லாபம் பார்த்தார். பிறகு மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் சேர அழைப்பு வந்தது. போன முறை செய்த தவறுகளை இந்த முறை அவர் செய்யவில்லை. இதில்தான் ஆப்பிள் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என முடிவு செய்து எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்க தொடங்கியது. ஐபாட், ஐபோன் என சிறந்த டிஜிட்டல் சாதனங்கள் சந்தைக்கு கிடைக்கத் தொடங்கின. தொழில்நுட்பத்தின் புரட்சியுகம் என இதைக் கூறலாம்.


2016ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வேல்ஸ் அணி, பெல்ஜியத்தை பந்தாடி வென்றது. காலிறுதிப் போட்டியில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் மேலாளர் கிறிஸ் கோல்மன் ஊடகங்களிடம் பேசினார்.


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இங்கு பார்க்கும் எந்த மகி்ழ்ச்சியும் என்னிடம் இல்லை. இப்போது நாங்கள் கடின உழைப்பால் வெற்றி பெற்றிருக்கிறோம். கனவு காணவும், தோல்வியடையவும் பயப்படவே தயங்கவே கூடாது. அனைவரும் தோல்வியை ச்ந்தித்தவர்கள்தான். எனவே, அதற்கு பயப்படவே கூடாது. நான் வெற்றியை விட தோல்வியை அதிகம் சந்தித்துள்ளேன். இப்போதும் தோல்வியடைய நான் பயப்படுவதில்லை.


மேலே சொன்ன இரு எடுத்துக்காட்டுகளும் துறை சார்ந்து வேறுபட்டவைதான். ஆனால் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பொறுத்தவரை ஒன்றுபோலத்தான் உள்ளது. நாம் நினைக்கும் விஷயங்கள் செயலாக்கம் பெற நீண்டகாலம் ஆகலாம். சிலருக்கு அடுத்தநாளே அல்லது ஒரு வாரத்திற்குள் கூட சாத்தியமாகலாம். பெப்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திரா நூயி, பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வர அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுதான் காரணம். அவரது வீட்டில் இரவு உணவின்போது, நீ குடியரசுத் தலைவரானால் என்ன செய்வாய் என்று அவரது அம்மா கேட்பாராம். இந்தக் கேள்விக்கான பதிலை யோசித்து உழைத்து தனக்கான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்.


பேஸ்புக்கின் செயல் தலைவர் ஷெரில் ஷான்ட்பெர்க் பதினெட்டு மாத திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படுகிறார். இதில் அலுவலகம், தனிப்பட்ட விஷயங்கள் என இரண்டுமே உண்டு. இந்நிறுவனத்தின் இயக்குநர், நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க் ஆண்டுதோறும் அடையவேண்டிய இலக்குகளை வகுத்துக்கொண்டு வேலை செய்கிறார். பெரிய நிறுவனங்களின் நிறுவனர்களைப் பற்றி பேசுவதால், பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் பின்பற்றும் சிறிய வழக்கம் எப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை மட்டும் நாம் கவனித்தால் போதும். 2016ஆம் ஆண்டு யோஷினோரி ஓசுமி, மூளையில் உள்ள செல்கள் மறுசுழற்சி அடைவதைப்பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார். சரியாக தூங்கினாலே வெற்றிகரமாக பல்வேறு விஷயங்களை யோசித்து சாதிக்க முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக மேலே சொன்ன தொழிலதிபர்கள் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.


தூங்குவதையும் உற்பத்திதிறனையும் சிலர் குழப்பிக்கொள்கிறார்கள். நேரு ஆழமாக தூங்கும் நேரத்தை கண்டுபிடித்து நான்கு மணிநேரம் மட்டுமே தூங்கினார் என்று கூறுவார்கள். எலன் மஸ்கும் கூட ஆறு மணி நேரத்திற்கு குறைவாகவே தூங்குகிறார். இதில் மேற்சொன்ன இருவருமே ஆதாயம் அடைந்தவர்கள் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இப்படி தூங்குவதையும் இவர்கள் சரியாக பழக்கம் செய்துகொண்டார்கள் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். கூகுள் தனது கலிபோர்னியா தலைமையகத்தில் எனர்ஜிபாடுகள் எனும் தூங்கும் அறையை உருவாக்கியுள்ளன. இதில் சோர்வுற்ற பணியாளர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம். இதனை நாசா, மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. ஹஃப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையும் கூட அதன் நிறுவனர் தூக்க பற்றாக்குறையால் மயங்கி விழுந்ததால் பணியாளர்களுக்கு தூங்குவதற்கான அறையை ஏற்பாடு செய்துள்ளது. தூக்கம் முக்கியமானதுதான். ஆனா்ல் இதனை அனைத்து நிறுவனங்களு்ம பின்பற்றுவதில்லை.


பேஸ்புக் நிறுவனம், தனது மீட்டிங்குகளை நிறுவனத்தின் வெளிப்புறத்தில் நடத்துகிறது. இயக்குநர் மார்க் நடந்துகொண்டே யோசிப்பது உற்பத்தித் திறனை பெருக்குகிறது என நம்புகிறார். ஸ்டீவ் ஜாப்சும் இப்படிப்பட்ட நடையின் மீது விருப்பம் கொண்டவர்தான்.


ஸ்டான்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேரிலி ஆபெசோ, டேனியல் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் நடந்துகொண்டே யோசிப்பது சிறப்பான பயன்களைத் தருகிறது என ஆய்வுப்பூர்வமாக கூறியுள்ளனர். இதைத்தான ஆபீசில் ஜிம் அமைப்பது. வேலை செய்யும் இடங்களில் டிரெட்மில்களை வைப்பது என பலரும் யோசித்து செய்து வருகின்றனர். வேலை செய்பவர்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்க பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஹில்டன் ஹோட்டல் குழுமம், உலகம் முழுவதும் ஏராளமான சொகுசு ஹோட்டல்களைநடத்தி வருகிறது. தற்போது தனது பணியாளர்களுக்கான அறையை அலங்காரமாக அமைத்துள்ளது. இதன்மூலம் அதன் பணியாளர்களும் கூட ஹோட்டலின் சொகுசு அனுபவிக்க முடிகிறது. அண்டர் ஆர்மர் எனும் துணி நிறுவனத்துடன் இணைந்து பணியா்ளர்களுக்கு எடை குறைந்த உடைகளை தைத்து வழங்கியுள்ளது. இதுபோன்ற சலுகைகள் எல்லாமே பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து அவர்களை சக்கையாக வேலை வாங்கத்தான். வெற்றிகரமான நிறுவனம், புதிய விஷயங்களை ஏற்றுக்கொண்டு சூழலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வது முக்கியம். அப்போதுதான் நிறுவனம் வெற்றிகரமாக சந்தையில் இருக்கமுடியும்.


ஜேம்ஸ் ஹோர்டன்


பிபிசி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்