கொலைகாரனை கண்டுபிடிக்க முயலும் போலீஸ்படையின் சாகச அனுபவம்! - புதிய நூல்கள் அறிமுகம்

 

 

 

 

 

Fiona McIntosh - Penguin Books Australia
Mirror Man by Fiona McIntosh - Penguin Books Australia

 

 

 

 

தி சிஎ்ஸ்ஐஆர்ஓ வுமன் ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன் கைட்


டாக்டர் ஜேன் போவன், பேவ் முகிஹாஸ்டர், ஜெம்மா வில்லியம்ஸ்


பான் மெக்மில்லன்


பெண்களின் உடலில் ஹார்மோன்கள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பெண்கள் கருமுட்டையை சுமப்பது தொடங்கி, மெனோபாஸ் காலகட்டம் வரை இதற்கான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சரியான ஊட்டச்சத்துகளை அவர்கள் எடுத்துக்கொள்வது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் விளைவுகளை எதிர்கொள்ள உதவும். இதில் ஏராளமான உணவு ரெசிப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிமுறைகளைப் படித்து பயன்படுத்தும்போது அவர்களின் உடல்நிலை மேம்படும்.



தி ஆஸ்விட்ஸ் போட்டோகிராபர்


மாரிஸியோ ஆன்னிஸ் அண்ட் லூகா கிரிப்பா


பெங்குவின்


ஆஷ்விட்ஸ் முகாமில அடைக்கப்பட்டிருந்த புகைப்படக்காரர் வில்ஹெம் பிராஸே என்பவரின் வாழ்க்கை சொல்லும் நூல். இவர்களின் முகாமை சோவியத் படை கைப்பற்றியதும் புகைப்படங்களை அழிக்க கேட்டது. ஆனாலும் புகைப்படக்காரர் அதனை அழிக்கமாட்டேன் என உறுதியாக நின்றார். இதன் காரணமாகவே நாஜி தலைவர்களுக்கு தண்டனை கிடைக்க புகைப்படங்கள் உதவின. இந்த புகைப்படங்கள் கொடூரம், நம்பிக்கை, தைரியம் என அனைத்து உணர்ச்சிகளின் வடிவமாக உள்ளது.



மாடர்ன் ஸ்லோகுக்கர்


அலைஸ் அலெக்ஸாண்ட்ரா


பெங்குவின்


இந்த புத்தகத்தில் சிறப்பாக சமையல் செய்வதற்கான 85 ரெசிபிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி காலை உணவு, சூப்புகள், இனிப்புகள் செய்யலாம். வேறு என்ன உருப்படியதாக நூலில் தேறுகிறது என்பதை நீங்கள் நூலை வாங்கிப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


ஃபேக் மெடிசின்


டாக்டர் பிராட் மெகே


ஹாசெட்


ஆரோக்கியத்தை காப்பதற்காக ஏராளமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. அவற்றில் பலவு்ம் போலியான மருந்துகளை சாப்பிட வலியுறுத்துகின்றன. அதில் உள்ள அரசியல் என்ன, அதில் எப்படி பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதை மருத்துவர் பிராட் மெக்கே விளக்கியுள்ளார்.


பேட் பீப்பிள் அண்ட் ஹவ் டு பி ரிட் ஆப் தெம்


ஜியோப்ரி ராபர்ட்சன்


வின்டேஜ்


ஜனநாயக அமைப்புகளை செயல்படவிடாமல் தடுத்து நாட்டை கெடுக்கும் சமூகவிரோதிகளின திட்டங்களை எப்படி செய்கிறார்கள் என்பதை நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். உலகளவில் எப்படி முக்கியமான அமைப்புகளின் நிதியை தடுத்து அநீதியை விளைவிக்கிறார்கள் என்பதை பல்வேறு தகவல்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். மனித உரிமை செயல்பாட்டாளராக உள்ள ராபர்சன் இந்த நூலை எழுதியுள்ளதால் பல்வே்று வாதங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.


ஹவ் டு மேக் எ டிரெஸ்


ஜென்னி பாக்காம்


பெங்குவின்


நூலை எழுதியுள்ளவர் ஆஞ்சலினா ஜோலி, இங்கிலாந்து இளவரசி கேட் ஆகியோருக்கு அழகிய கவுன்களை தைத்து கொடுத்து புகழ்பெற்றவர். இவர் தன்னுடைய வாழ்க்கை, உடை வடிவமைப்பாளராக வென்றது எங்கே, சறுக்கியது எங்கே என்று தன் அனுபவங்களை நூலாக எழுதியுள்ளார்.


தி சேஸ்


கேண்டிஷ் பாக்ஸ்


பெங்குவின்


சிறையில் இருந்து 600 கைதிகள் தப்பித்து விடுகிறார்கள். எதிரே இருப்பது பாலைவனம் எப்படி தப்பிப்பது, இவர்களை எப்பாடு பட்டாவது பிடித்து கம்பிகளுக்கு பின்னே உட்கார வைப்பது பெண் வார்டனின் சத்தியவாக்கு. கைதிகள் தப்பித்தார்களா, வார்டனின் சத்திய வாக்கு வென்றதா என்பதை ஏராளமான திருப்பங்களுடனும், அங்கதமாகவும் கூறியுள்ளார் பாக்ஸ்


கம்யூனிஸ்ட் டாட்டர்


அரோவா மொரினோ துரன்


ஹாசெட்


இருநூறு பக்கங்களில் எழுதப்பட்ட வலிமையான நாவல். சிறுவயதில் ஜெர்மனியின் பெர்லினில் வாழ்ந்த கேட்டியின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. அவள் எடுக்கும் முக்கியமான முடிவு அவள் குடும்பத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு, அதனை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதை விவரிக்கிறது.




மிரர் மேன்


பியோனா மெகின்டோஷ்


பெங்குவின்


ஜேக் ஹேக்ஸ்வொர்த், நாட்டில் பல்வேறு கொலைகளை செய்து தப்பித்து வரும் கொலைகாரனை எப்படி தேடி கண்டுபிடிக்கிறார். இதற்காக அவரும் அ்வரது குழுவும் என்ன முயற்சிகளை செய்கிறார்கள் என்பதை வலுவான பாத்திரங்கள், கதை சொல்லல்

மூலம் பியோனா நம்ப வைத்திருக்கிறார். துப்பறியும் கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தாராளமாக இந்த நூலை வாங்கலாம். தொடர்நூல் வகையில் மூன்றாவது நூல் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.



ரீடர்ஸ் டைஜெஸ்ட்


டையன் கோல்ட்லே




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்