ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா
ஓமர் அப்துல்லா
அரசியல் கட்சி தலைவர்
காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார். இதுபற்றி அ வரிடம் பேசினோம்.
உங்களையும், உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு. இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள்?
மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது. இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார். இதயத்திலிருந்து தொலைவாக, டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார். இதற்கு என்ன அர்த்தம்? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும்
இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?
இது தொடக்கம்தான். ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது. பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரில் சிறப்பு சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்னரே பிரதமர் மோடியை சந்தித்து பேசினீர்கள் அல்லவா?
ஜம்மு காஷ்மீரில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. கலந்துரையாடலில பங்குகொண்டு பேசுபவர்கள், பயமின்றி தங்களது கோரிக்கைகளை முன் வைக்கவேண்டும். நாங்கள் பேசும்போது பிரதமரும் உள்துறை அமைச்சரும் இடையூறு செய்யாமல் கேட்டனர்.
நீங்கள் சிறப்பு சட்டத்தை நீக்க கூடாது என கோரிவருகிறீர்கள். இப்போது அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. இதனை நீதிமன்றம் தீர்க்கவேண்டு்ம் என்று நினைக்கிறீர்களா?
சட்டம் 370 படி காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து கொண்டதாக இருக்ககவேண்டும் என நினைக்கிறோம். எங்களது அரசியல் கோரிக்கையில் இது முக்கியமானதும் கூட. சங் பரிவார் அமைப்புகள் இந்த சட்டத்தை அகற்ற 70 ஆண்டுகளாக போராடின. நாங்களும் திரும்ப சட்டத்தை மீட்க எழுபது ஆண்டுகள், எழுபது மாதங்கள், எழுபது வாரங்கள் என காலம் நீண்டாலும் போராடத்தான் போகிறோம்.
பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி, தேர்தல் நடத்தி பிறகு மாநில உரிமைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்கிறீர்களா?
அசாமில் இதுபோன செயல்முறை கடைபிடிக்கப்படவில்லை. அங்கு நேரடியாக தேர்தல் நடத்தப்ப்ட்டு பிறகு பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீரில் மட்டும் ஏன் வினோதமாக அரசு நடந்துகொள்கிறது? நாட்டில் இருவிதமான விதிகள் கடைபிடிக்கப்படுவது சரியானதான எனக்குத் தோன்றவில்லை. காங்கிரஸின் குலாம் நபி ஆசாம் , காஷ்மீருக்கு முதலில் மாநில உரிமைகள் வழங்கப்படும் என்று கூறினார். எங்களுக்கு அவரின் அணுகுமுறை பிடித்திருந்தது.
சந்திப்பு உங்களுக்கு பிடித்தமானதாக அமையாதபோது அதிலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா?
இப்போதுதான் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. நான் ஆரோக்கியமான முறையில் பிரச்னைகளை விவாதிக்க விரும்புகிறேன். முதலில் தொடங்கியுள்ள இந்த பிரச்னையை வரவேறகலாம் என்று நினைக்கிறேன்.
உங்களது அரசியல் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
என்னிடம் எந்த கிரிஸ்டல் பந்தும் கிடையாது. ஆகஸ்ட் 2019க்குப் பிறகு நடைபெறும் செயல்முறையில் நான் ஒரு சிறு சக்கரம்தான். இதுதொடர்பாக ஒரேயொரு சந்திப்பு மட்டுமே நடந்துள்ளது.
பல்வேறு கட்சிகள் இணைந்து ஒன்றாக குப்கார் அணி உருவானதை பலரும் விமர்சனம் செய்தார்கள். இதைப்பற்றி உங்களது கருத்து?
எட்டு ஆண்டுகள் உண்டு உறைவிட பள்ளியில் படித்து வளர்ந்தவன். என்னால் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும். இவர்களின் விமர்சனங்களுக்காக எனது கருத்தியலை நான் கைவிடமுடியாது. மனதிலுள்ள கருத்துகளை பேசுவதோடு விரிவான அளவில் கலந்துரையாடலும் இந்த விவகாரத்தில் தேவைப்படுகிறது.
ஹெச்டி
ஹரிந்தர் பவேஜா
கருத்துகள்
கருத்துரையிடுக