திரையுலகில் இருந்த அதிகார விளையாட்டை எதிர்கொள்ள கல்வி உதவியது! - ஸ்வரா பாஸ்கர், இந்தி நடிகை

 

 

 

 

 

Swara Bhasker has a savage response to trolls criticising ...

 

 

 

ஸ்வரா பாஸ்கர்

நடிகை


தானு வெட்ஸ் மானு படத்தில் பாயல் என்ற பாத்திரத்தில் நடித்து மக்களின் அபிமானம் பெற்றவர். அனார்கலி ஆப் ஆரா என்ற படத்திலும் தனது நடிப்பை கவனிக்க வைத்தார். ராஸ்பரி படத்தில் பாலியல் ஆர்வம் கொண்டவராக நடிப்பது, வீர் டி வெட்டிங் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண் என ஸ்வரா பாஸ்கர் நடித்த பல்வேறு பாத்திரங்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தந்தவை.


பல்வேறு பாத்திரங்களின் வழியாக நடந்த உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


ஒருவர் நடிக்கும் பாத்திரத்தின் வழியாக பெண்களை வலிமையாக காட்டும் படங்கள் உருவாகிறது என்பதை நான் நம்பவில்லை. ஒருவர் தனது துறையில் வலிமையாக வெற்றியைக் கொடுக்கும்போது அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது. சிறந்த நடிகர் ஒருவர் நடிக்கும்போது அதன் நீளம் அதனை பாதிப்பதில்லை. நாட்டில் உள்ள சிறந்த நடிகர்களான ஜானி வாக்கர், பிரான், அம்ரிஷ் ஆகியோர் முக்கியமான சிறிய பாத்திரங்களில்தான் நடித்து புகழ்பெற்றார்கள். ஒவ்வொரு நடிகரும் அவரது பாத்திரத்தை நாயகராகவே நினைக்கிறார். இந்த வகையில் நான் நடிக்கும் துணைநடிகை பாத்திரம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதனை நில் பட்டே சொனாட்டா, அனார்கலி ஆஃப் ஆரா ஆகிய படங்கள் மூலம் சாத்தியமானது.


பெண்களுக்கான மையப்பொருட்கள் எப்படி இங்கு எப்படி உருவாக்கப்படுகிறது?


இன்று இந்தியாவிலுள்ள திரைக்கதை, கதை ஆசிரியர்கள் உலகளவில் நடக்கும் மாற்றங்ளளை கவனிக்கிறார்கள். இந்த சந்தை எப்போதும் திறந்தே இருக்கிறது. இதில் படங்கள் வெற்றியடையும்போது, பெண்களை மையப்படுத்திய கதைகளின் மீது நம்பிக்கை பெறுகிறார்கள். முன்பை விட இப்போது நிறைய பெண்கள் கேமராவின் பின்னே இருக்கிறார்கள். ஸோயா அக்தர், கௌரி ஷிண்டே, அஸ்வின் ஐயர், ஜூகி சதுர்வேதி, அலன்கிரிடா ஶ்ரீவஸ்தவா, நித்யா மெஹ்ரா , ரீமா காக்தி ஆகியோரை் இதில் குறிப்பிடலாம். இன்னும் நிறைய பெண்கள் உள்ளே வரும்போது நிறைய துறைகள் மாற்றங்களை சந்திக்கும். இந்த வகையில் புதிய கதைகள் சொல்லப்பட வாய்ப்புள்ளது.


இங்கு நடைபெறும் அதிகாரம் தொடர்பான விளையாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


வெளியில் இருந்து வந்தவளானா எனக்கு கடினமாகவே இருந்தது. ஆனால் இதனை சமாளிக்க முடியாது என்று கூறமுடியாது. எனக்கு இதை சமாளிக்கும் தைரியத்தைக் கொடுத்தது கல்விதான். எனது பெற்றோர் உனது கனவுக்காக செய்யும் முயற்சிகள் சரிதான். ஆனால் முதலில் படிப்பை முடிக்கவேண்டும் என்று கூறினர். எனவே நான் மிராண்டா ஹவுசில் எனது இலக்கியப்படிப்பை முடித்தேன். பிறகு சமூகவியலில் முதுகலைப்படிப்பை ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து நிறைவு செய்தேன். எனவே கல்வி என்னைக் காப்பாற்றும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதிகார விளையாட்டு நடைபெறுவது உண்மைதான் என்றாலும் அதனை சமாளிப்பதற்கான திறனை நான் வளர்த்துக்கொண்டேன். அப்படி இல்லாதபோது உங்களுக்கு இங்கே பணிபுரிவது கடினமாகவே இருக்கும்.




ஓடிடி தளங்கள் இன்று பல்வேறு கதைகளை மக்களுக்கு சொல்வதில் வேகமாக இருக்கின்றன. இந்த தளம் புதிய ஆட்களை உள்ளே கொண்டு வருகிறது என்று நம்புகிறீர்களா?


நடிகர்களுக்கு இது சிறப்பான நேரம் என்று கூறலாம். இப்போது திரைப்படங்கள், ஓடிடி தளங்களுக்கான வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நான் வேலை செய்து வருகிறேன். முன்னிலை பாத்திரங்கள், துணைப்பாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பறவைப் பார்வையில் பார்த்தால் மக்கள் சிறந்த நடிப்பை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். நீங்கள் சிறப்பாக நடிக்கும் திறன் கொண்டவர் என்றால் இது உங்களுக்கான நேரம் என்று உறுதியாக நம்பலாம்.


பினான்சியல் எக்ஸ்பிரஸ்


ரேயா



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்