அப்பாக்களை கொண்டாடும் தினத்தில் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்கள்!
தந்தையரை கொண்டாடும் நூல்கள்!
வரும் ஜூன் மாதம் அப்பாக்களை நினைவுகூருவதற்கான தினம் வருகிறது. 20ஆம் தேதி வரும் இந்த தினத்தை நூல்களைப் படித்து கொண்டாடலாம் அல்லவா? இதற்காக சில நூல்களை பார்ப்போம் வாங்க!
பெஸ்ட் சீட் இன் தி ஹவுஸ் 18 கோல்டன் லெசன்ஸ் பிரம் எ பாதர் டு ஹிஸ் சன்
கோல்டன் பியர் என்று அழைக்கப்படும் ஜேக் நிக்லாஸ் என்பவரின் மகன் எழுதியுள்ள நூல் இது. அவரது தந்தையும் அம்மாவும் இணைந்த நடத்திய குடும்ப வாழ்க்கை, கடைபிடித்த விஷயங்கள், விதிகள், கட்டுப்பாடுகள், பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என ஏராளமான விஷயங்கள் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
டாட் இஸ் ஃபேட்
2013ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர், எழுத்தாளர் ஜிம் காபிகன் எழுதிய நூல். இவர் தனது குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர். இப்படி பிறந்தவர் எப்படி இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்தார். தன்னை அப்பா எப்படி பார்த்துக்கொண்டார் என்பதையும், எழுந்த பிரச்னைகளையும் நேர்மையாக எழுதியுள்ளார். நூலின் பின்பகுதியில் காபிகனின் குடும்ப புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது வாசகர்களை முழுநிறைவைத் தருகிறது.
லக்கி மேன்
2018ஆம் ஆண்டு ஜேமல் பிரிங்கிலி எழுதிய நூல் இது. இதில் ஒன்பது கதைகள் உள்ளன. ஆப்பிரிக்க அமெரிக்க மனிதர்கள்தான் கதைகளில் இடம்பெறுகிறார்கள். அப்பா, மகன் ஆகியோருக்கு இடையிலான உறவைத்தான் அனைத்து கதைகளும் பேசுகின்றன. இதோடு உலகம் எப்படி இனம், மதம், பொருளாதாரம் என பிரிந்துள்ளது என்பது நுட்பமாக வாசிப்பவர்களுக்கு பதிய வைக்கிற நூல் என்று கூறலாம்.
ஹேர் லவ்
இந்த நூல் 2019ஆம் ஆண்டு வெளியான மேத்யூ செரியின் ஆஸ்கர் வென்ற குறும்படத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. அப்பா, மகள் ஆகியோருக்கு இடையிலான உறவையும், மகளுக்கு தன்னம்பிக்கை எப்படி உருவாகிறது என்பதையும் நூல் சொல்லுகிறது. மகளுக்கு அவளது முடி மீதான காதலையும், அதனை அப்பா எப்படி பார்க்கிறார் என்பதையும் கூறும் கதை அனைவருக்கும் பிடிக்கும்.
திங்க்ஸ் மை சன் நீட்ஸ் டு நோ அபவுட் தி வேர்ல்ட்
ஸ்வீடனைச் சேர்ந்த பத்தி எழுத்தாளர் பிரடரிக் பேக்மேன் எழுதிய நூல். இவருக்கு மகன் பிறந்தபிறகு தந்தையாக எப்படி அந்த பொறுப்பை ஏற்றார், அதில் சொதப்பிய இடங்கள், தாக்குபிடித்த தருணங்கள், நொந்துபோன நேரம் என அனைத்தையும் நேர்மையாக எழுதியுள்ளார். படிக்கும்போது புன்னகையுடன் படிக்கலாம். தந்தை மகனுக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுப்பது போன்ற தொனியில் அமைந்த முக்கியமான நூல் இது. இவரது எ மேன் கால்டு ஓவ் எனும் நூல் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
யுவர் பேபி ஃபர்ஸ்ட் வேர்ட் வில் பி டாடா
எழுத்தாளர் நகைச்சுவை நடிகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிம்மி ஃபாலன் எழுதிய நூல் இது. இந்த நூல் ஆசிரியரின் இரண்டு குழந்தைகளைப் பற்றியது. டாடா என்ற சொல்லை சொல்ல வைக்க என்ன முயற்சிகளை ஜிம்மி செய்தார் என்பதை நூல் நகைச்சுவையுடன் விவரிக்கிறது. அப்பா என்ற சொல்லை குழந்தை சொல்லும்போது ஒருவர் அடையும் நெகிழ்ச்சியை சொன்ன விதத்தில் நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
எ பெட்டர் மேன் எ லெட்டர் டு மை சன்
இது தனது மகனுக்கு இன்றைய உலகைப் பற்றியும் வன்முறைக்கு இடமளிக்காக அப்பா மகன் உறவை வலியுறுத்தி கடித வடிவில் எழுதப்பட்ட நூல். மைக்கேல் தனது அப்பாவுடனான கசப்பான உறவு் தனது வாழ்க்கையை எப்படி பாதித்தது என்பது எழுதியுள்ளார். ஒருவகையில் சுயசரிதை தன்மை கொண்ட கடித நூல் என்று கூறலாம்.
மிஸ்டு ட்ரான்ஸ்லேஷன் மீட்டிங் தி இமிக்கிரன்ட் பேரன்ட்ஸ் வூ ரெய்ஸ்டு மீ
அமெரிக்காவைச் சேர்ந்த சோபன் டெப், 2020இல் எழுதிய நூல், தனது இந்திய பெற்றோர் எப்படி அமெரிக்காவில் குடும்பத்தை வளர்த்தார்கள் என்று கூறுகிறது. இந்தியாவில் உள்ள குடும்ப கிளைகளை தேடிப்போவது, அதில் உள்ள ரகசியங்கள் என நிறைய விஷயங்களை புன்னகையுடன் படிக்கும்படி நூலை எழுதியுள்ளார்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
ரேயா மெஹ்ரோத்ரா
கருத்துகள்
கருத்துரையிடுக