கொலை செய்யப்பட ஆரோக்கிய ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து கொலை செய்த கொலைகாரன்!

 

 

 

 

 

 

 

எளிதில் கிடைக்காத வாய்ப்பு


கொலை செய்வதற்கான தூண்டுதல் எப்படி கிடைக்கிறதமோ அதேபோல்தான் அதனை செயல்படுத்துவதற்கான தருணம் கிடைப்பதும் கூட சில தொடர் கொலைகார ர்கள் ஆண், பெண், குழந்தை, முதியவர் என யார் கிடைத்தாலும் கொல்வதுதானே திட்டம்? என கொன்று கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் வரலாற்றில் முக்கியமான கொலைகா ர்களாக அறியப்பட்டவர்கள் குறிப்பிட்ட இயல்பினைக் கொண்ட ஆண்களை, பெண்களை மட்டுமே கொல்லுவார்கள். அது அவர்களின் அம்மாவை நினைவுபடுத்தலாம். அல்லது பவுன் நிறமுள்ள முடி, குறிப்பிட்ட சாயல் கொண்ட பெண்கள் மட்டும் என்று கூட வைத்துக்கொள்ளலாம். கொலைகார ர்களுக்கு கிடைக்கும் திடீர் வாய்ப்புகளில் அதிகம் உயிரிழந்தவர்கள் என ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், விலைமாதுக்களை கூறலாம். பொதுவாக இந்த இரண்டு பிரிவினருமே காணாமல் போனால், இறந்துபோனால் கூட கவலைப்பட அதிக ஆட்கள் கிடையாது. அரசு எந்திரமும் கண்துடைப்பாக சில காட்சிகளை நடத்தும். இதனால் பெரும்பாலானோரின எளிய இலக்காகவே இவர்களே இருப்பார்கள். கேரி ஹெய்ட்னிக் என்பவர் இந்த வகையில் தனது பண்ணைக்கு கொலை செய்வதற்கான இரையை கொண்டு வந்து சிக்கவைத்து கொல்வார். பெரும்பாலும் கருப்பின பெண்களை வல்லுறவு செய்து அடிமையாக்கி சித்திரவதை செய்வார். பெர்க்கோவிட்ஸின் பெயர்தான் சன் ஆப் சாம். இவர் எப்படிப்பட்ட பெண்களை கொல்லுவார் என உளவியலாளர்கள் கூறினர். பழுப்பு நிறமுள்ள முடி கொண்ட பெண்கள்தான் இவரது சாய்ஸ் என்றதும் நகரத்திலுள்ள பெண்கள் அனைவருமே உடனடியாக உயிர்பிழைக்க தலைமுடியின் நிறத்தை மாற்றிக்கொண்டது. சிலர் முடியின் நீளத்தைக் குறைத்துக்கொண்டனர். இதுபற்றி பெர்க்கோவிட்சிடம் கேட்டபோது, அவர் தன் அம்மாவின் சாயல், பழுப்பு முடி என்றெல்லாம் இழுக்கவிலை. நேரடியாக நான் அழகான பெண்களை மட்டுமே கொல்லுவேன் என்று முடித்துவிட்டார். டெட்பண்டி கவர்ச்சியாக உள்ள நடுத்தர வர்க்க பெண்களை மட்டுமே தேடிப்பிடித்து கடத்தி வல்லுறவு செய்து அவர்களைக் கொன்றார். சரியான வாய்ப்பு கிடைத்தால் தேவையான மனிதர்களை கடத்தி கொல்லுவதற்கு தொடர் கொலைகாரர்கள் தவறுவதில்லை. இப்போது ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.


ராபர்ட் லீ யேட்ஸ்


அமெரிக்காவில் ஸ்போகனே எனும் நகரில் தொண்ணூறு முதல் தொண்ணூற்று எட்டாம் ஆண்டு வரையில் பதிமூன்றுக்கும் மேற்பட்ட விலைமாதுக்களை தேடித்தேடி கொன்றவர்தான் ராபர்ட். இத்தனைக்கு வெட்டியாக சுற்றிக்கொண்டு கொலைகளை செய்யவில்லை. ராணுவத்தில் விமானப்படையில் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றியவர். மனைவி, ஐந்து குழந்தைகள் என நாற்பத்தி ஏழு வயதில் நன்றாக வாழ்ந்திருக்க வேண்டியவர்.


காரில் சென்று விலைமாதுக்கள் சுற்றித்திரியும் ஏரியாவில் நிற்பது, தனக்கு தேவையான பெண்ணை தேர்ந்தெடுத்து காரில் ஏற்றிக்கொண்டு செல்வது, பிறகு சமாச்சாரங்களை முடித்துக்கொண்டபிறகு துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டு, பிணத்தை நெடுஞ்சாலை பக்கமாக உருட்டிவிடுவது என்பதுதான் ராபரட்டின் பிளான். எட்டு ஆண்டுகள் இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் விலைமாதுக்களின் பிணம் நிர்வாணமாக சாலையில், ஆற்றில் கிடந்தன. ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கொல்கிறார்கள் என அமைதியாக இருந்த காவல்துறை எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் வேறுவழியின்றி விசாரணையைத் தொடங்கியது. இதில் விலைமாதுக்கள் குழுமும் இடத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிர்பிழைத்து வந்த செய்தி கிடைத்தது. கூடவே அவரை த் தாக்கியவர் எப்படிப்பட்டவர் என விசாரித்ததில், அடிக்கடி அப்பகுதியில் சுற்றும் ராபர்ட் அது என உறுதிசெய்துவிட்டர். டிஎன்ஏ சோதனையில் குற்றம் உறுதியாக 408 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


தாக்குதல்


திடீரென தோன்றி பெண்களைத் தாக்கி பணத்தை கொள்ளையடிப்பது, விலைமாதுக்களின் தொண்டையை அறுத்துக்கொள்வது, சுத்தியலால் தலையை அடித்து உடைப்பது என வினோதமாக கொலைகார ர்களின் தாக்குதலை செய்தியாக அறிந்திருப்போம். இவர் பிடிஎஸ்எம் வாழ்க்கைமுறையை பயன்படுத்தி பெணகளை தாக்கிக் கொன்ற ஸ்லேவ் மாஸ்டர். இந்த பெயரில் இணையத்தில் சாடோசிஸ்ட் மாசோசிஸ்ட் சாட் ரூம்களில் பெண்களை பேசி னன் வழிக்கு கொண்டுவருவது, அவர்கள் இன்பம் இதோ இதோ என்று சொல்லி விடுதிகளுக்கு வர வைத்து தாக்கி பணத்தைப் பறிப்பது அல்லது கொல்வது என பயங்கர விளையாட்டை விளையாடினார். 2000ஆம் ஆண்டில் இவர் செய்த மூன்று கொலைகளை கண்டுபிடித்த அரசு, இவருக்கு விஷ ஊசி போட்டு அமைதிபடுத்தியது. இத்தனைக்கும் இவர் குடும்பஸ்தர். நான்கு குழந்தைகள் இருந்தனர். வீடற்றவர்களுக்கும், திருமணமின்றி கர்ப்பம் தரித்த பெண்களுக்கும் உதவும் அமைப்பொன்றை உருவாக்கி நடத்தி வந்தார். இதில் இவரிடம் உதவி கேட்ட பெண்கள் மெல்ல காணாமல் போனவர் பற்றிய செய்திகளில் இடம்பிடிக்கத் தொடங்கினர். இவர்தான் கொலைகளை செய்தார் என்று கண்டுபிடிக்க முடியாதபடி வள்ளல் பிம்பம் இவருக்கு துணையாக இருந்தது.


இரு பெண்களை செக்சுக்காக வரவைத்து அடித்து உதைத்து பணத்தைப் பிடிங்கிகொண்டதுதான் ஜான் செய்த தவறு. அதை குறித்து வைத்துக்கொண்ட காவல்துறை, மெல்ல அவரை கட்டம் கட்டத் தொடங்கியது. பிறகு அவரை சந்தித்த பிறகு காணாமல் போன திருமணமாகாத கர்ப்பிணி பெண்களின் பட்டியலையும் கவனிக்கத் தொடங்கினர். ஜானின் பண்ணைக்கு திடீரென்று சென்று சோதனையிட்டு டிரம்பில் மிதந்த பெண்களின் பிணங்களைக் கைப்பற்றினர். இந்த இடம் மட்டுமன்றி நகரில் இன்னொரு இடத்தில் வாடகை இடத்தை பிடித்து வைத்து அங்கும் பிணங்களை பேரலில் மறைத்து வைத்திருந்தார். 2002இல் ஜானின் வேட்டையாடு விளையாடு விளையாட்ட்டை காவல்துறை முடித்துவைத்தது.

கொலைசெய்யப்பட ஆட்கள் தேவை!


பெரும்பாலும் நாளிதழ்களில் மணமாலை, கிளாசிபீல்டு வகையறாக்களை பலரும் சுவாரசியமாக பார்ப்பதுண்டு. திருமணம், ஆட்கள் தேவை, வேலைக்கு ஆட்கள் தேவையா நாங்கள் இருக்கிறோம் என்று கூட விளம்பரங்கள் செய்வதுண்டு. இப்படி விளம்பரங்களை வலையாக்கி அதில் சிக்குபவர்களை இரையாக்கும் சம்பவங்கள் கொலை வரலாற்றில் நிறைய நடந்துள்ளன.


ஆல்பர்ட் பிஷ் கூட இப்படி நாளிதழில் வேலை செய்வதற்கான ஆர்வத்துடன் உள்ள இளைஞனைப் பற்றிய செய்தியைப் படித்தார். உடனே அந்த முகவரிக்கு சென்று பார்த்தார். ஆனால் அவருக்கு பையனைவிட அங்கிருந்த சிறுமியை பிடித்துவிட்டது. அவளை தூக்கி வந்து சித்திரவதை செய்து கொன்றார். நார்வேயைச் சேர்ந்த பெண் பெல்லா குன்னெஸ் என்ற பெண், நாளிதழில் மணமகன் தேவை என்ற விளம்பரம் கொடுத்து விரும்பவர்களை தனது பண்ணை வீட்டுக்கு வரச்சொன்னார். இப்படி வந்த இளைஞர்கள் ஒரு டஜன் பேரை கொன்று வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்துவிட்டார் அந்த பெண்மணி. தீவிபத்தில் அவரது பண்ணை வீடு எரிந்துபோனபோதுதான் இறந்துபோன உடல்களை வெளியுலக ம் அடையாளம் கண்டது.


புதாபெஸ்டில் பெலா கிஸ் என்பவர, இப்படி விளம்பரம் கொடுத்து தன்னை தேடி வந்த பெண்களை கொன்று ஆல்கஹால் பேரல்களில் உடம்பை ஊற வைத்திருந்தார். ஹென்றி லாண்ட்ரு என்பவரும் இப்படி பெண்களை கொன்று சமாதி கட்டியவர்தான். இவர் எப்படி எந்த முறையில் அவர்களைக் கொன்றார் என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பாபி லாங் பற்றி முன்னமே முதல் பாகத்தில் எழுதியுள்ளோ்ம். இவரும் பத்திரிக்கையில் வரும் வீட்டு உபயோகப்ப பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் முகவரிகளை எடுத்து வைத்துவிட்டு அதிலுள்ள எண்களுக்கு தொடர்புகொள்வார். பேசுவது பெண்கள் என்றால் அதனை மட்டும் தனியாக பிரித்துவைத்துவிட்டு, வார நாட்களில் அந்த வீட்டுக்கு செல்வார். அந்த நேரத்தில் கணவர் அலுவலகம் சென்றுவிட, குழந்தைகளும் பள்ளிக்கு சென்றிருப்பார்கள். பாபி பொருட்களை வாங்குவது போல நடித்து திடீரென பெண்ணைத் தாக்கி கைகளை கட்டி வைத்து வல்லுறவு கொள்வார். பிறகு வீட்டிலுள்ள பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓடிவிடுவார்.



2002இல் இன்னொரு நேர்மையான கொலைகார ர் உலகிற்கு அறிமுகமானார்.இவர் நாளிதழில் ஆரோக்கியமான மனிதர் கொலை செய்யப்படுவதற்கு தேவை என விளம்பரம் கொடுத்தார். ஆர்மின் எம் என்ற ஜெர்மன் பொறியாளர் விளம்பரத்தைக் கொடுத்தார். இதையும் நம்பி, இவரை ஒருவர் போய் சந்தித்திருக்கிறார். அவரது பாலுறுப்புகளை வெட்டிய ஆர்மின் எம், சிலவற்றை சாப்பிட ப்ரிட்ஜில் வைத்துவிட்டு மற்றதை தோட்டத்தில் புதைத்திருக்கிறார். இப்படி கொல்லப்பட இன்னும் தன்னார்வலர்கள் தேவை என இன்னொரு விளம்பரமும் கொடுக்கப்பட ஜெர்மன் காவல்துறை பொங்கியெழுந்து நரமாமிச கொலையாளியை கைது செய்த்து. ஒருவரை கொலைதான் செய்யப்போகிறேன் என்று கிளியராக கிளாரிட்டியாக சொன்ன கொலையாளி ஆர்மின்தான்.

vincent






கருத்துகள்