நியூசிலாந்து நாட்டை தலைநிமிரச் செய்த பிரதமரின் வாழ்க்கை ! புதிய புத்தகங்கள் அறிமுகம்

 

 

 

 

 

 

 


 

HarperCollins presents Jacinda Ardern: Leading with ...


புதிய புத்தகங்கள் அறிமுகம்



ஸ்கில் இட் கில் இட்


ரோனி ஸ்க்ரூவாலா


பெங்குவின் ராண்டம் ஹவுஸ்


ரோனி ஸ்க்ரூவாலா, தனது வாழ்க்கையில் சந்தித்த வெற்றி, தோல்விகளை வைத்து பல்வேறு மென்திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என விளக்கியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநர்களும் பல்வேறு நேர்காணல்கள், வேலை செய்யும் முறை ஆகியவற்றைப் பற்றி தொடர்ச்சியாக எதற்கு பேசுகிறார்கள் என்பது அறிய படிக்க வேண்டிய நூல் இது.



ஜெசிண்டா ஆர்டெர்ன்


சுப்ரியா வாணி, கார்ல் எ ஹார்ட்டே


ஹார்ப்பர் கோலின்ஸ்



2017ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக ஆனது முதல் ஜெசிண்டா தீவிரவாதம், பெண்கள், எல்ஜிபிடி, தொழிலாளர் சீர்திருத்தங்கள், பருவச்சூழல் மாற்றம் ஆகியவற்றில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். எப்படி விஷயங்களை வேறுபட்ட கோணத்தில் பார்த்து முடிவெடுத்து மக்களுக்கான நன்மையை செய்யமுடியும் என்பதில் ஜெசிண்டாவும் பலரும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.


டெஸ்ட் காட்ஸ்


நிக்கோலஸ் ஸ்மிடில்


பெங்குவின் ராண்டம் ஹவுஸ்


விண்வெளி சுற்றுலா என்பது விரைவில் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான செயல்பாடு எப்படி நடைபெறும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைத்தான் வர்ஜின் காலாடிக் நிறு்வனத்திற்கு சென்று எழுதி வந்திருக்கிறார் நூலாசிரியர். நியூயார்க்கர் இதழின் செய்தியாளர் நிக்கோலஸின் எழுத்தில் அங்கு செய்யப்படும் பல்வேறு சோதனைகள், இதன் பின்னாலுள்ள நோக்கம் ஆகியவற்றைப் பற்றியும் தெளிவான சித்திரத்தை அளிக்கிறார்.



பிரேமர்ஸ்


கென்னத் குக்கியர், விக்டர் மேயர், பிரான்சிஸ்


பெங்குவின் ராண்டம் ஹவுஸ்


மனிதர்கள் எப்படி பிரச்னை ஒன்றை உருவாகும்போது அதனை தீர்க்க அதனை பிரேம் செய்கிறார்கள் என்பதை நூல் விவரிக்கிறது. குறிப்பிட்ட விஷயத்தை எப்படி பார்த்து, அதனை தீர்க்க செய்யும் முயற்சிகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் பிரேம்கள் என்று சொல்கிறார்கள். இந்த வகையில் நாம் என்ன விஷயங்களை கற்றுக்கொள்கிறோம், நமது திறன் எப்படி அதிகரிக்கிறது என்பதையும் விளக்கியுள்ளனர்.


மை பாதர்


அரவிந்த் பனகரியா


ஹார்ப்பர் கோலின்ஸ்


1946ஆம் ஆண்டு பலூ டால் பனகரியா தனது 25 வயதில் லோக்வாணி நாளிதழில் ஆசிரியர் குழுவில் ஒருவராக வந்து இணைகிறார். இவரது வாழ்க்கையினூடே அன்றைய பிரிட்டிஷ் அரசின் நிலை, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை வரலாற்றுப் பின்னணியில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.




கருத்துகள்