கிராபிக் சிப்களுக்கு கூடுகிறது மவுசு!
சிப்களின் வேகம் கூடிவருகிறது!
கடந்த ஐம்பது ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பயன்படுத்தும் கணினிகளின் வேகம் கூடியுள்ளது. ஒப்பீட்டளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிப்களின் வேகம் கூட்டப்பட்டு வருகிறது. இன்டலை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூரின் விதிகளின் பட வேகம் அதிகரித்து வருகிறது. 1965இல் இதற்கான விதியை இவர் உருவாக்கினார்.
சிப்களை முடிந்தளவு சிறிதாக உருவாக்கி அதன் பாகங்களையும் நேர்த்தியாக உருவாக்கி வேகத்தை கூட்டி வருகின்றனர். மைக்ரோபுரோசசர்கள் இன்று கணினிகளின் திறனை அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கையின் பெரும்பகுதி டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது. உணவு, போக்குவரத்து முதல் சமூக வலைத்தளம், ரோபோட்டிக்ஸ், மிகை மெய்ம்மை, எந்திர கற்றல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது நாம் அதிளளவு டேட்டாவை உருவாக்கி வருகிறோம். அதனை மேக கணிய முறையில் பயன்படுத்தி வருகிறோம்.
இப்படி சேகரித்து வைக்கும் டேட்டாவை அலச நமக்கு அதிகளவு கணினித் திறன் தேவை. ஆனால் இப்படியே இந்த செயல்பாட்டை கொண்டு செல்லமுடியாது . ட்ரான்சிஸ்டர்களை சிறியதாக மாற்றி செயல்பாட்டை செய்துகொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றம் சிறிது காலத்தில் முடிவுக்கு வரும்போது கணினிகளின் திறன் அதற்குமேல் நகருமா என்று தெரியவில்லை. இப்போது ஆப்பிளின் ஏ 11 சிப் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இதில் 4.3 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. இனி அடுத்து வரும் சிப்கள் இதனை விட சிறிய இடத்தில் உருவாக்கப்படும். இந்த அமைப்பிலுள்ள எ்லக்ட்ரான்களை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். ஏராளமான டிரான்சிஸ்டர்களை ஒரே இடத்தில் அழுத்தி வைப்பது சிலிகான் வேபர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பதோடு வெப்பமும் கூடுதலாகு்ம். இந்த வெப்பத்தை குறைக்க முடியாதபோது, எளிதில் தீப்பிடிக்கும் ஆபத்தும் உள்ளது.
சிப் தயாரிப்பாளர்கள் இதிலுள்ள பிரச்னைகளை முன்னமே அறிந்திருந்தனர். எனவே அதை மையமாக வைத்தே இயங்கி வந்தனர். மைக்ரோபுரோசசர்களின் வேகத்தை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தனர். 1991இல் 25 மெகாஹெர்ட்ஸாக இருந்த சிப்களின் வேகம் 1998இல் 200 மெகா ஹெர்ட்ஸாக அதிகரித்தது. 2008இல் 3.8 ஜிகா ஹெர்ட்ஆஆக அதிகரித்தது. அதைத்தான் பென்டியம் 4 புரோசசர் என்று கூறுகிறோம். எந்தளவு சிப்கள் வேகமாக மாறுகிறதோ அந்தளவு அதனை குளுமைப்படுத்துவது கடினமானதாக மாறும். டபுள் கோர், குவாட் கோர், 8 கோர், 16 கோர் எல்லாம் இதற்கு கட்டுப்பட்டதுதான்.
மூரின் விதிகளும் ஒருகட்டத்தில் முடிவை எட்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இனிமேல் சிப்களின் தயாரிப்பு என்பது விலை குறைவானதாக இருக்காது. அதை வாங்கிப் பயன்படுத்துவது்ம எளிதாக இருக்காது. இதற்கான எல்லையை விரைவில் நிறுவனங்கள் தொட்டுவிடும். எனவே இதற்கு மாற்றாக சிப் தயாரிப்பாளரகள் குறிப்பிட்ட கணக்கிடுதல் சார்ந்த துறையில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். கிராபிக் புரோசசர்களை இதற்கு சான்றாக கூறலாம். கணினி விளையாட்டுகளை விளையாடுவதோடு கணக்குகளையும் ஒரே நேரத்தல் செய்வதாக இவை உருவாக்கப்படுகின்றன. இதனை தகவல் ஆய்வு, எந்திரக்க ற்றலுக்கும் பயன்படுத்திக்கொள்ள உள்ளனர். பிற் நிறுவனங்களும் அப்ளிகேஷன்களுக்கான இன்டகிரேட்டட் சர்க்கியூட்களை உருவாக்கி வருகின்றன. கூகுள் டென்சர் புரோசசிங் யூனிட்டுகளை உருவாக்கி வருகின்றன. இதில் 250 சிப்கள் அடுக்கி வைக்கப்பட்டு இயங்குகின்றன. இதற்கான பீட்டா சோதனைகளும் தொடங்கியுள்ளன. மூர் விதி முடிவுக்கு வந்தாலும் கூட கண்டுபிடிப்புகள் நிற்கவில்லை. சிப் கண்டுபிடிப்பும் முன்னேற்றமும் வேறுவழியில் தற்போது நடந்து வருகிறது. இதன்மூலம் தகவல்களை ஆய்வு செய்வதும் வேறுவழியில் நடைபெற்று வருகிறது.
சயின்ஸ் போகஸ்
பீட்டர் பென்ட்லி
கருத்துகள்
கருத்துரையிடுக