இடுகைகள்

இலக்கியம் - 50 பிளஸ் எழுத்தாளர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐம்பதிலும் சாதித்த பிரபல எழுத்தாளர்கள்!

படம்
ஐம்பதில் எழுத்தாளர்! Laura Ingalls Wilder(1867-1957) அமெரிக்காவின் விஸ்கான்சினில் பிறந்த லாரா, லிட்டில் ஹவுஸ், பிரைரி எனும் தொடர்வரிசை குழந்தைகள் நூல்களாக நினைவுகூரப்படும் எழுத்தாளர். ஆசிரியர், பத்தி எழுத்தாளராக செயல்பட்ட லாரா, முதல் நூலான Little House in the Big Woods(1932) எழுதி வெளியிட்டபோது 65 வயதைத் தொட்டு இருந்தார். Richard Adams(1920-2016) இங்கிலாந்தின் நியூபரியில் பிறந்த ரிச்சர்ட் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று, அரசு தேர்வுகள் எழுதி அதிகாரி ஆனார். கிடைத்த நேரங்களில் எழுதிய விஷயங்களை ஒன்றுசேர்த்து   Watership Down நாவலாக வெளியிட்டபோது ரிச்சர்டின் வயது 52. விருதுகள் வென்றதோடு குழந்தைகளுக்கும் பிடித்தமான நாவலாக மாறியது. Bram Stoker(1847-1912) அயர்லாந்தின் டப்ளினில் பிறந்த பிராம் ஸ்டோகர், நடிகர் ஹென்றி இர்வினின் உதவியாளர், லைசியம் தியேட்டரின் மேலாளர். பல்வேறு நாடகங்களை பார்த்து விமர்சன் எழுதியவர் தன் 50 வது வயதில் 1897 ஆம் ஆண்டு எழுதிய டிராகுலா மாஸ் வெற்றி பெற்றது.