இடுகைகள்

கணக்கு எண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பணம் கையாளப் பழகுவோம் - பட்ஜெட் திட்டம்

படம்
        4 பணம் கையாளப் பழகுவோம் பட்ஜெட் திட்டம் இந்திய அரசு , ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை ( பட்ஜெட் ) உருவாக்குகிறது . அதில்தான் நாட்டில் வருமானம் , செலவு , பற்றாக்குறை ஆகிய விஷயங்கள் இடம்பெறும் . அனைத்து மக்களுக்கும் என்னென்ன திட்டங்களுக்கு அரசு செலவு செய்கிறது என மக்களுக்கும் தெளிவாகும் . தனிப்பட்ட முறையில் நாமும் வாரம் தோறும் , மாதந்தோறும் , ஆண்டுதோறும் செய்யும் செலவுகளையும் , சேமிப்பையும் கண்டறிய பட்ஜெட் போடுவது அவசியம் . தனிமனிதராக ஒருவர் தனது எதிர்கால வருமானத்தை யூகித்து பட்ஜெட் போடுவது அவசியம் . அப்போதுதான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அவர் முன்னேற முடியும் . ஒருவரின் நிதி நிர்வாகத்திறனை முன்னேற்றுவதற்கே பட்ஜெட் உருவாக்கப்படுகிறது . சேமிப்பு சேமிப்பு = வருமானம் - செலவு வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் கிடைப்பதுதான் ஒருவரின் சேமிப்பு . செலவு = வருமானம் - சேமிப்பு வருமானத்திலிருந்து சேமிப்பைக் கழிப்பது போக கிடைப்பதுதான் செலவு . ஒருவர் தான் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு , வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்து அவசியம் ப