இடுகைகள்

இந்தியாவின் முதல் தேர்தல் அதிகாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதல் தேர்தல் அதிகாரி தெரியுமா?

படம்
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை நடத்திய அதிகாரி!  உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் ஸ்பெஷல், அதன் பிரமாண்டமான தேர்தல் திருவிழாதான். மொழி, மதம், கலாசாரம் என எண்ணற்ற சவால்களைக் கொண்ட இந்தியாவில் மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களை கண்காணிப்புடன் திறம்பட கட்டுப்பாடு குறையாமல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துவதை உலகின் வல்லரசு நாடுகளும் கூட எதிர்பார்ப்பும் ஆர்வமுமாக கவனித்து வருகின்றன.   ஆட்சி மாற்றம், பதவி நியமனம் ஆகியவற்றில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பு குறித்த சந்தேகங்கள் இன்று கிளம்பினாலும் மத்திய, மாநில தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பும் பணியும் அசாதாரணமானது. இந்தியா போன்ற பல்வேறு கலாசாரங்கள், மாறுபட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டில் பிரச்னைகள், பூசல்கள் இன்றி முன்பு வாக்குச்சீட்டுகள் மூலமும் இன்று வாக்கு எந்திரங்கள் மூலமும் தேர்தலை சுமூகமாக நடத்த எண்ணற்ற குடிமைத்துறை அதிகாரிகளின் உழைப்பே காரணம். அவர்களில் முக்கியமானவர் 1951-52 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை திட்டமிட்டு நடத்திய முதல் தேர்தல் கமிஷனர் சுகுமார் சென். 1899 ஆம் ஆண்டு கல்கத்தா