இடுகைகள்

சார்பட்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் எந்தக்கட்சிக்கும் எதிரானவன் இல்லை! - பா.ரஞ்சித்

படம்
  பா.ரஞ்சித்  திரைப்பட இயக்குநர் சார்பட்டா உங்களுடைய சிறந்த படம் என நினைக்கிறீர்களா? நான் இயக்கிய அனைத்து படங்களுமே எனக்கு பிடித்தமானவைதான். அதிக முயற்சி எடுத்து இயக்கி படம் என்றால் அது காலாதான். அது சமூகத்தில் ஏற்படுத்திய விவாதங்கள் முக்கியமானவை. நான் மிகவும் நேசித்த படம் என்றால் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி ஆகியவற்றை சொல்லுவேன். எனது படங்களை நான் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அவை அனைத்துமே எனக்கு பிடித்தவைதான். முந்தைய படங்களுக்கு வந்த விமர்சனங்கள்தான், சார்பட்டாவை வலிமையாக உருவாக்க உதவியது.  உங்களுடைய படங்களுக்கு திரைக்கதை எப்படி அமைக்கிறீர்கள்? நான் என்னுடன் எப்போதுமே குறிப்பேடு ஒன்றை வைத்திருப்பேன். அதில் அவ்வப்போது தோன்றும் ஐடியாக்களை எழுதி வைப்பேன். பின்னர் அவற்றை கணினிக்கு மாற்றிக்கொள்வேன். சார்பட்டா படத்திற்கு சென்னையிலுள்ள தலித் மக்களின் வாழ்க்கையை அறிந்த எழுத்தாளர் தமிழ் பிரபா உதவினார். எட்டு அல்லது ஒன்பது திரைக்கதைகளை எழுதினோம். அதில் ஏராளமான பாத்திரங்கள் உருவாகி வளர்ந்து அழிந்தன. அதில் எனக்கு பிடித்தமான பாத்திரம் ரதி. இவர் கறிக்கடை வைத்திருப்பவராக டான்சிங் ரோசின் அக்க