இடுகைகள்

வெளியுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!

படம்
  பாண்டாவுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.  உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது.  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்டு, சீனாவில் உள

இந்திய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத ஏழு அம்சங்கள்!

படம்
  இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஏழு தூண்கள் வெளிநாட்டுப் பயணம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அப்ரைசல் பெறுவதற்கான முக்கியமான தகுதி, அவர்களுடைய முதலாளி அதாவது, தலைவர் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாரா இல்லையா என்பதுதான். அதிகமுறை வெளிநாடுகளுக்கு செல்ல உதவியிருந்தால் அவருக்கு நிச்சயமாக பதவி உயர்வு உண்டு. அதிக நாட்கள் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்தால், வெளியுறவு அமைச்சகத்தில் அத்றகு உதவிய அதிகாரிகளுக்கு விரைவான வளர்ச்சி சாத்தியம். கட்டி அணைப்பேன் உன்னையே… நாட்டின் தலைவர், உலகின் வலிமையான தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும்போது அதை புகைப்படமாக, வீடியோ வழியாக பார்க்கும் அனைத்து இந்தியர்களின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். ஆனால் அப்படி உணர்ச்சி பொங்காதபோது நீங்கள் உடனே அருகிலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு சென்று உங்கள் இதயத்தில் தேசதுரோக கருத்துகள் உள்ளதாக என சோதித்துக்கொள்வது நல்லது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களைக் கட்டிப் பிடிப்பது முக்கியமான அம்சம். இதை நீண்ட காலமாக முக்கியமான கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் ஐ.நா பாதுகாப்பு கௌன்சிலில் நிர

இந்தியாவை முன்னிலை பெற செய்த பெண் அதிகாரிகள்! - ஈனம் காம்பிர், ஸ்னேகா துபே, விதிஷா மைத்ரா, பௌலோமி திரிபாதி

படம்
  ஸ்னேகா துபே அதிகாரம் வாய்ந்த பெண்கள்  கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்கு இந்திய பெண்கள் இந்தியா சார்பாக ஐ.நாவில் பேசியுள்ளனர். ஸ்னேகா துபே, ஈனம் காம்பிர், விதிஷா மைத்ரா,  பௌலோமி திரிபாதி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நாவில் வெளிப்படையாக தெரிவித்து நாளிதழ் செய்திகளில் இடம்பெற்றனர். அவர்களைப் பற்றிய சின்ன அறிமுகம்.  ஈனம் காம்பிர் நியூயார்க்கில் உள்ள ஐ.நாவின் இந்தியாவிற்கான நிரந்தர திட்ட கமிஷன் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஐ.நாவின் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதி பிரிவில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். கணிதப் பாடத்தில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். உலகநாடுகளில் பாதுகாப்பு பற்றியும் படித்துள்ளார். 2005இல் குடிமைத்துறை தேர்வு எழுதி வெளியுறவுத்துறைக்கு தேர்வான சாதனையாளர்.  ஸ்னேகா துபே கோவாவில் பிறந்து வளர்ந்த ஸ்னேகாவின் கனவே வெளியுறவுத்துறை அதிகாரி ஆவதுதான். தனது 12 ஆவது வயதிலேயே இதற்கான கனவு கண்டார் என்பதுதான் இவரைப் பற்றி நாம் இங்கே எழுத காரணம். 2011ஆம் ஆண்டு குடிமைத்தேர்வை முதல் முயற்சியிலேயே எழுதி வென்றார். வெளியுறவுத்துறைக்கு தேர்வானவரை வெளியுறவுத

அதீத தேசியவாதம் உலக நாடுகளிடையே உள்ள கூட்டுறவைக் குலைக்கிறது!- சிவசங்கர் மேனன்

படம்
            சிவசங்கர் மேனன் முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் இவர் தற்போது சாய்சஸ் இன்சைட் தி மேக்கிங் ஆப் இந்தியன் பாரீன் பாலிசி என்ற நூலை எழுதியுள்ளார் . இந்த நூலைப்பற்றியும் தற்போது உள்ள அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம் . வரலாற்றில் நிலப்பரப்பு என்பதை ஏன் முக்கியமாக நினைக்கிறீர்கள் ? நாம் உலக அரசியல் நடப்புகளில் பங்கேற்றுள்ளோம் . இதில் வலிமை வாய்ந்த நாடுகள் , அணிசேரா நாடுகள் ஆகியவை உள்ளடங்கும் . இந்தியா - அமெரிக்கா , இந்தியா - ரஷ்யா , இந்தியா - சீனா ஆகிய கூட்டணிகள் வரலாற்றில் உள்ளன . நாம் எப்படி உருவாகினோம் . எந்த இடத்தில் உருவாகினோம் என்பதை இன்று மறந்துவிட்டோம் . நிலப்பரப்புரீதியான அரசியல் என்பதில் வரலாறு , ஆதாரங்கள் , நிலப்பரப்பு ஆகியவை முக்கியமானது . நீண்டகால நோக்கில் பயனளிக்கும் விஷயங்களை செய்யவேண்டும் . சீனா இப்போது வளர்ந்து வரும் முக்கியமான நாடாக உள்ளது . ஆனால் அதிலும் தேசியவாதம் முக்கியமானதாக உள்ளது . இந்தியாவில் கூட இதே விதமாக தேசியவாதம் ஆதிக்கத்தில் உள்ளது . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? தேசியவாதம் என்பது ் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோ

ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை

படம்
                ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை வணிகம் ட்ரம்ப் சீனாவுடன் செய்த வணிகப்போர் வேறுவகையில் தொடரும் . கூட்டணி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மறைமுகமான வழியில் சீனாவுக்கு வர்த்தக அழுத்தம் தரப்பட வாய்ப்புள்ளது . அணுஆயுத ஒப்பந்தம் ஈரான் அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது . இதன்மூலம் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்க நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கும் . இருநாட்டு உறவுகள் சீர்ப்பட ஒப்பந்தம் மிகவும் அவசியம் . சூழல் ஒப்பந்தம் தூய ஆற்றல் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது . 2018 ஆம் ஆண்டு அதிக கார்பன் வாயுவை வெளியிட்ட நாடுகள் வரிசையில் சீனா , ஜப்பான் , அமெரிக்கா , இந்தியா , ரஷ்யா ஆகியவை உண்டு் . 1.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் கார்பன் வாயுவை வெளியிடுவதற்கான கடும் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது . அமெரிக்காவில் தயாரிப்போம் சாத்தியமில்லாத திட்டம்தான் . ஆனால் தேசியவாதம் வளர்ந்து வரும்போது என்ன செய்வது ? டிரம்ப் ஏற்படுத்திய மேட் இன் அமெரிக்காவை இன்னும் பெரிய

சீனாவுடன் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்க்கமுடியாது! - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

படம்
    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்     வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முந்தைய அரசு கடைபிடித்த வெளிநாட்டு கொள்கைகளுக்கும் இப்போதையை அரசு கடைபிடிக்கும் கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இன்று உலகம் நிலையில்லாது மாறிவிட்டது. அதனால் அதற்கேற்ப நாம் வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டியதிருக்கிறது. அமெரிக்கா தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் தொடங்கிவிட்டன. மிகவும் ஊக்கம் கொண்ட நாடாக ரஷ்யா, ஜப்பான் ஆகியவை உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளி்ன் அதிகாரம் மாறி வருகிறது. இதற்கேற்ப இந்திய வழியில் நாம் நடைபோட்டால்தான் நெ.1 அந்தஸ்தை நாம் அடைய முடியும். உள்நாட்டு தீவிரவாதம், வறுமை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு அம்சங்களோடு போராட வேண்டியுள்ளது. கடல் பாதுகாப்பு, எல்லைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இலங்கை, மொசாம்பிக், நேபாளம், ஏமன் ஆகிய நாடுகள் முக்கியமானவை. நாம் பல்வேறு நாடுகளுக்கு கோ்விட் -19 நோய்த்தொற்றுக்கு மருந்துகளை அனுப்பி உதவியுள்ளோம். இந்தியா தேசிய அளவிலும், உலக அளவிலும் தெற்காசியாவில் முக்கியமான நாடு எ

காணாமல் போன பெண் தொழிலாளர்கள்! - ஜிடிபி சரிவுக்கு முக்கியக் காரணம்!

படம்
foreign relation council மாருதி, ஹோண்டா, பஜாஜ் கம்பெனிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நாம் பெண் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் காலகட்டம் இது. பெண் தொழிலாளர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. என்ன காரணம்? பெண்கள் பெருமளவு கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இதனால் பாமர பெண்கள் பார்க்கும் வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட சற்றே ரிஸ்க் எடுத்து நகருக்கு வந்தால், அவர்கள் நல்ல வேலையில் சேருவார்களே தவிர காட்டு வேலைக்கோ, கட்டட வேலைக்கோ போவது சாத்தியமில்லை. கிராம ப்புறத்தில் கூட குறைந்தபட்சம் பிஹெச்டி வரை படித்து விடுகிறார்கள் பெண்கள். காரணம், கல்விக்கட்டணம் குறைவு. மற்றொன்று கருத்தாகப் படிப்பதும்தான். பெண்கள் வேலைக்குச்சென்றாலும் கல்வித்தகுதி சார்ந்தே யோசிக்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, பெரும்பாலும் வேலையைக் கைவிடும் முடிவை அவர்களே எடுக்கிறார்கள். காரணம், குடும்பத்திற்கான நேரத்தை  செலவிடுவதுதான். சென்னை போன்ற மாநகரங்களில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும் அதனை புகாரின்