காணாமல் போன பெண் தொழிலாளர்கள்! - ஜிடிபி சரிவுக்கு முக்கியக் காரணம்!
foreign relation council |
மாருதி, ஹோண்டா, பஜாஜ் கம்பெனிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நாம் பெண் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் காலகட்டம் இது.
பெண் தொழிலாளர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. என்ன காரணம்?
பெண்கள் பெருமளவு கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இதனால் பாமர பெண்கள் பார்க்கும் வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட சற்றே ரிஸ்க் எடுத்து நகருக்கு வந்தால், அவர்கள் நல்ல வேலையில் சேருவார்களே தவிர காட்டு வேலைக்கோ, கட்டட வேலைக்கோ போவது சாத்தியமில்லை. கிராம ப்புறத்தில் கூட குறைந்தபட்சம் பிஹெச்டி வரை படித்து விடுகிறார்கள் பெண்கள். காரணம், கல்விக்கட்டணம் குறைவு. மற்றொன்று கருத்தாகப் படிப்பதும்தான்.
பெண்கள் வேலைக்குச்சென்றாலும் கல்வித்தகுதி சார்ந்தே யோசிக்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, பெரும்பாலும் வேலையைக் கைவிடும் முடிவை அவர்களே எடுக்கிறார்கள். காரணம், குடும்பத்திற்கான நேரத்தை செலவிடுவதுதான். சென்னை போன்ற மாநகரங்களில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும் அதனை புகாரின்றி வேலைகளைப் பிரித்துக்கொண்டு செய்கிறார்கள்தான்.
விவசாய வேலைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்போது குறைந்துவிட்டன. காரணம், அனைத்தும் இயந்திரமயமாகிவிட்டது. வேலை சுருக்காக முடிவதோடு இதற்கு ஆகும் செலவும் குறைவு.
பெரும்பாலும் பெண்கள் கடும் மன, உடல் அழுத்தம் தரும் வேலைகளுக்கு வரவேற்கப்படுவதில்லை. இயந்திரங்களுக்கு இணையாக இங்கு ஆண்களே வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.
பெண்கள் பொதுவாகவே குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை பெற்றுள்ளனர். தங்களுக்கான இடம் என்பதை மிக கவனமாக தராசில் எடை போடுவது போன்று தக்கவைத்துள்ளனர். எனவே காலை 9.30 என்றால் மாலை 6 என டாண் என்று கிளம்பிவிடுவார்கள். இதில் குறை சொல்ல ஏதுமில்லை. அவர்கள் அப்படித்தான். மேலும் ஆபீஸ் தூரமாக இருந்தால் பெரும் மலைப்பும், பெருமூச்சும் பெண்களிடம் வருகிறது. இதனை எந்த மேனேஜர், மனிதவளத்துறை மேலாளர் விரும்புவார். எனவே பெண்களை வேலையிலிருந்து விலக்குகின்றனர்.
2004 -05 காலகட்டத்தில் பெண்களின் வேலைவாய்ப்பு அளவு 43 சதவீதமாக இருந்தது. 2017-18 காலகட்டத்தில் இதன் அளவு 23 சதவீதமாக சரிந்துள்ளது. விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று கட்டுரைகள் எழுதினாலும் விவசாயம் சாராத வேலைவாய்ப்புகள் இன்று அதிகரித்துள்ளன. கல்வி கற்ற பெண்கள் அதற்கு நகர்ந்துவிட்டனர். அதில் சாதிக்க முடியாத பெண்கள் நூல் ஆலைகள், உடை தைக்கும் தொழிற்சாலை என்று பணிபுரிந்து வருகின்றனர்.
நாண்டி பவுண்டேஷன் 70 ஆயிரம் இளம்பெண்களை ஆய்வு செய்தது. இதில் 21 வயதுக்கு குறைந்து திருமணம் செய்ய விரும்பியவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என தெரிய வந்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை நான்குக்கு மூன்று என்று உள்ளது. பத்தில் ஏழு பேர் டிகிரி பெறவேண்டும். படிக்க வேண்டும் என பதில் சொல்லியுள்ளனர். நாம் காரணங்களைச் சொல்வதை விட பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். குறைவாக படித்த பெண்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பைத் தவிர வேறு என்ன வேலைவாய்ப்புகளை அரசு வழங்குகிறது? என கேள்வி கேட்கிறார் பொருளாதார வல்லுநரான தேஷ்பாண்டே.
கிராமத்தில் இன்று கௌரவமான வேலை என்றால் அங்கன்வாடி அல்லது ஆஷா பணிதான். இதே காலகட்டத்தில் சீனாவில் விவசாயம் சாராத பணிகள் அதிகரித்து வருகிறது. அதில் பெண்களின் பங்களிப்பும் அதிகம். இதன்விளைவாக ஜிடிபியும் அதிகரித்து வருகிறது என்கிறார் பொருளாதார நிபுணரான மெஹ்ரோட்ரா.
பெண்களும் பொருளாதாரத்தில் பங்களித்தால் ஜிடிபி 43 சதவீதமாக உயர்ந்திருக்கும் என்கிறது ஆக்ஸ்ஃபேம் அறிக்கை.
நன்றி- டைம்ஸ் - அமுல்யா கோபாலகிருஷ்ணன்